/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னாலை கைவிட் ட கூட்டாளிகள்
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., எத்னாலை கைவிட் ட கூட்டாளிகள்
ADDED : ஏப் 30, 2025 08:16 AM

பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், பசனகவுடா பாட்டீல் எத்னாலை, அவரது கூட்டாளிகள் தனித்து விட்டுள்ளனர்.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா. இவருக்கு எதிராக எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையிலான அணியில் எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ், முன்னாள் எம்.பி.,க்கள் பிரதாப் சிம்ஹா, சித்தேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் குமார் பங்காரப்பா, அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் இருந்தனர்.
விஜயேந்திராவுக்கு எதிராக இவர்கள் குரல் கொடுத்தனர். விஜயேந்திராவுக்கு எதிராக பேசுவதை, நிகழ்ச்சி நிரலாகவே வைத்திருந்தனர். எத்னாலின் பேச்சால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்த, மேலிடம் அவரை அதிரடியாக நீக்கியது.
ஆரம்பத்தில் 'எத்னாலுக்கு ஆதரவாக இருப்போம்' என, அவரது கூட்டாளிகள் பேசி வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர்.
'எத்னால் தனி கட்சி ஆரம்பித்தால் அவருடன் செல்ல மாட்டோம்' என, குமார் பங்காரப்பா கூறினார். 'எத்னால் பேசும்போது கட்டுப்பாடுடன் பேசி இருக்க வேண்டும்' என, ரமேஷ் அந்தர் பல்டி அடித்தார்.
தற்போது எத்னாலுடன், பழைய கூட்டாளிகள் யாரும் தொடர்பில் இல்லை. அவர் தனித்து விடப்பட்டுள்ளார். விஜயேந்திராவை பற்றி இப்போது யாருமே பேசுவதும் இல்லை. ஆனாலும் எத்னால் கூட்டாளிகள், தனக்கு எதிராக திரும்பி விட கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக இருக்கும் விஜயேந்திரா, தன் எதிராளிகளிடம் நைசாக பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.
'கட்சியில் உங்களுக்கு பதவி கொடுக்கிறோம்; என்னுடன் இணைந்து செயல்படுங்கள்; உங்கள் அறிவுரையை கேட்கிறேன்' என கூறி, தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
- நமது நிருபர் -