/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் 701 கி.மீ., சைக்கிள் யாத்திரை நிறைவு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் 701 கி.மீ., சைக்கிள் யாத்திரை நிறைவு
பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் 701 கி.மீ., சைக்கிள் யாத்திரை நிறைவு
பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் 701 கி.மீ., சைக்கிள் யாத்திரை நிறைவு
ADDED : டிச 29, 2025 06:31 AM

பெங்களூரு: பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், சைக்கிள் யாத்திரையாக சென்று கன்னியாகுமரியை அடைந்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு பின், அவர் சைக்கிள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
பெங்களூரின் ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், சைக்கிள் யாத்திரையில் ஆர்வம் கொண்டவர். 1974ல் அவர் முதன் முறையாக, சைக்கிள் யாத்திரையை துவக்கினார். கர்நாடகாவின் பல்வேறு கோவில்களுக்கு, சைக்கிளில் சென்று தரிசனம் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன், பெங்களூரில் இருந்து நஞ்சன்கூடுக்கு சைக்கிளில் சென்றிருந்தார்.
அடுத்து பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் யாத்திரை செல்ல திட்டமிட்டார். டிசம்பர் 23ம் தேதி காலை, பெங்களூரின் பசவேஸ்வரநகரில் இருந்து சைக்கிள் யாத்திரையை துவக்கினார். அவருடன், சில ஆதரவாளர்கள், 12 சைக்கிளிஸ்டுகள் உடன் சென்றுள்ளனர். 701 கி.மீ., தொலைவில் உள்ள கன்னியாகுமரியை, 37 மணி நேரத்தில் வெற்றிகரமாக சென்று அடைந்து உள்ளார்.
சுரேஷ்குமார் கூறியதாவது:
என் நண்பர்கள் வெங்கடேஷ், சோம்நாத்துடன் கடந்த 51 ஆண்டுக்கு முன் சைக்கிள் யாத்திரை துவங்கினேன். 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நிறைவு கூரும் வகையில், மீண்டும் நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சைக்கிள் யாத்திரை செல்ல திட்டமிட்டேன். ஆனால் என் உடல்ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதால், செல்ல முடியவில்லை. இப்போது என் விருப்பம் நிறைவேறியது. என் வாழ்க்கையில் இது மறக்க முடியாத மைல் கல்.
இவ்வாறு அவர் கூறினார்.

