/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
ADDED : டிச 29, 2025 06:31 AM

தங்கவயல்: தங்கவயல் குட்டஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரஹள்ளி கிராமத்தில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
தங்கவயலின் குட்டஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரஹள்ளி கிராமத்தில், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வந்தது. அதனால், சமூக நலத்துறை சிறப்பு நிதியில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்கும் ஆர்.ஓ., பிளான்ட் ஏற்படுத்தினார்.
இந்த சுத்திகரிப்பு நிலையம், குட்டஹள்ளி கிராம பஞ்சாயத்து பிரமுகர்கள் முன்னிலையில், நேற்று திறந்து வைக்கப்பட்டது. அப்போது ரூபகலா பேசுகையில், ''மிகவும் அவசியமான, சுத்தமான குடிநீர் வழங்கும் நிலையம் இங்கு திறக்கப்பட்டுள்ளது. இதனை மாரஹள்ளி கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல, கிராமத்துக்கு தேவையான மாரஹள்ளி முதல் நாயன ஹள்ளி வரையிலான சாலை வசதியும், 3.8 கோடி ரூபாய் செலவில் விரைவில் அமைத்து தரப்படும்,'' என்றார்.

