/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புத்தாண்டு கொண்டாட்டம்: 20,000 போலீசார் பாதுகாப்பு
/
புத்தாண்டு கொண்டாட்டம்: 20,000 போலீசார் பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டம்: 20,000 போலீசார் பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டம்: 20,000 போலீசார் பாதுகாப்பு
ADDED : டிச 29, 2025 06:30 AM

பெங்களூரு: பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நகர் முழுதும் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க, நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. டி.ஜி.பி., சலீம், போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, பரமேஸ்வர் கூறியதாவது:
நகரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில், சட்டம் - ஒழுங்கை சேர்ந்த 14,000 போலீசார், 2,500 போக்குவரத்து போலீசார் உட்பட பலர் இடம் பெறுவர்.
கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எலக்ட்ரானிக் சிட்டி, எம்.ஜி., ரோடு, பிரிகேட் ரோடு ஆகியவை அதிக மக்கள் கூடும் இடங்கள். இந்த ஆண்டு, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொண்டாட்டத்தில் பங்கேற்போர், வீடு திரும்ப கூடுதலாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 250 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. பெண்கள் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ்கள், வாகனங்கள், போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட தகவல்களை அறிய, 'கியூ ஆர் குறியீடு' ஒட்டப்படும்.
குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் ஏ.ஐ., கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த கேமரா மூலம், குற்றவாளிகள் எளிதில் அடையாளம் காணப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

