/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கஞ்சா தலைநகரம் பா.ஜ., குற்றச்சாட்டு
/
கஞ்சா தலைநகரம் பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : நவ 04, 2025 04:51 AM

பெங்களூரு:  கஞ்சாவின் தலைநகரமாக கர்நாடகா திகழ்வதாக பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி 'பகீர்' குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. சாலைப் பள்ளங்களை மூட, அவர்கள் கூறிய தேதிகள் கடந்து பல நாட்கள் ஆகிவிட்டன.
விவசாயிகள் தற்கொலை செய்வதில் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. அவர்கள் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன? இதற்கான தீர்வை அரசால் வழங்க முடியவில்லையா?
கஞ்சாவின் தலைநகரமாக கர்நாடகா திகழ்கிறது. யார் வேண்டுமானாலும் முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிவிடுங்கள். எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. மக்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். அதுவே எங்களுக்கு முக்கியம்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 134 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இதில், ஒன்பது மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்படாமல் உள்ள 125 வாக்குறுதிகள் குறித்து பேசுங்கள். அது பற்றி ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? அமைச்சர்களின் ஊழல் குறித்த வீடியோ, ஆடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

