தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தலித்களுக்கு அநியாயம் பா.ஜ., குற்றச்சாட்டு

 தலித்களுக்கு அநியாயம் பா.ஜ., குற்றச்சாட்டு

 தலித்களுக்கு அநியாயம் பா.ஜ., குற்றச்சாட்டு


ADDED : மார் 09, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: ''அமைச்சர் மஹா தேவப்பாவினால், தலித்துகளுக்கு அநியாயம் நடக்கிறது. அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், கன்னத்தில் அறைய ஆசைப்படுகிறேன்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் சிவனகவுடா நாயக் தெரிவித்தார்.

சி த்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நாங்கள் மதகரி நாயகரின் வம்சத்தினர். அநியாயத்தை எதிர்த்து போராடுவோம். தலித் அமைச்சர் மஹாதேவப்பாவினால், எங்களுக்கு அநியாயம் நடக்கிறது. அவரை சந்தித்தால் கன்னத்தில் அறைய தோன்றுகிறது.

நாங்கள் போராட்டத்துக்கு வருவதற்கு முன், இட ஒதக்கீடு பெற்று கொண்டு, வீரர்களை போன்று வரு வோம். இல்லாவிட்டால் பிணமாக வருவோம். எங்களின் போராட்டத்தில் ஸ்ரீராமுலு, கோவிந்த் கார்ஜோள் செத்தாலும் பரவாயில்லை; போராட் டம் நிற்காது.

இட ஒதுக்கீடு வலியுறுத்தி, மார்ச் 12ம் தேதி சித்ரதுர்காவில் இருந்து துவங்கும் பாதயாத்திரையில் பங்கேற்க, ம.ஜ.த., தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். மார்ச் 23ல், சட்டசபைக்குள்ளும் பா.ஜ., போராட்டம் நடத்தும். அரசுக்கு காலக்கெடு விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us