ADDED : டிச 26, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை லாயக்கற்றவர் என்று விமர்சித்த, அமைச்சர் பிரியங்க் கார்கே மீது பா.ஜ., கோபத்தில் உள்ளது.
பெலகாவியில் நடந்த கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், மேல்சபையில் நடந்த விவாதத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை லாயக்கற்றவர் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகனும், கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிரியங்க் கார்கே விமர்சனம் செய்தார்.
இதனால், பா.ஜ., தலைவர்கள் கோபம் அடைந்து உள்ளனர். 'தனது பேச்சுக்காக பிரியங்க் கார்கே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று, பெலகாவியின் ராய்பாக் எம்.எல்.ஏ., துரியோதன் ஐஹோல் உட்பட பலர் வலியுறுத்தி உள்ளார்.

