தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹிரியூர் தொகுதியை பா.ஜ.,விடம் கேட்க ம.ஜ.த.,வினர் அழுத்தம்

ஹிரியூர் தொகுதியை பா.ஜ.,விடம் கேட்க ம.ஜ.த.,வினர் அழுத்தம்

ஹிரியூர் தொகுதியை பா.ஜ.,விடம் கேட்க ம.ஜ.த.,வினர் அழுத்தம்


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: ‘ஹிரியூர் தொகுதியில், நமது கட்சி வேட்பாளரை நிறுத்துவோம். அத்தொகுதியை பா.ஜ.,விடம் இருந்து கேட்டு பெறுங்கள்’ என, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு, ம.ஜ.த.,வினர் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

சித்ரதுர்காவின் ஹிரியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் டி.சுதாகர், 62. திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராகவும் இருந்த அவர், மே 10ல் இறந்தார்.

இதனால் ஹிரியூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதத்திற்குள் இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

காங்கிரஸ் சார்பில் சுதாகர் மகன் சுகாஷ் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

இத்தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்த, ம.ஜ.த., நினைத்திருந்தது. ஆனால், கூட்டணியில் உள்ள பா.ஜ., தலைவர்கள், தங்கள் வேட்பாளரை நிறுத்துவதில் ஆர்வமாக உள்ளனர். கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திலும், இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், குமாரசாமியை, சித்ரதுர்கா மாவட்ட ம.ஜ.த.,வினர் சந்தித்துள்ளனர். அப்போது, ‘ஹிரியூரில் ம.ஜ.த.,வுக்கு நிறைய செல்வாக்கு உள்ளது.

அங்கு, 2 முறை வெற்றி பெற்று உள்ளோம். பா.ஜ., ஒரு முறை தான் வெற்றி பெற்றுள்ளது.

பா.ஜ., தலைவர்களிடம் பேசி, அந்த தொகுதியை நமக்கு கேளுங்கள்’ என்று அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, பா.ஜ., மேலிடத்திடம் பேசுவதாக குமாரசாமியும், தொண்டர்களிடம் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us