தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நகரம் முழுதும் குப்பை: அசோக்

நகரம் முழுதும் குப்பை: அசோக்

நகரம் முழுதும் குப்பை: அசோக்


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 07:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு முழுதும் குப்பையாக காட்சி அளிப்பதால், மக்கள் வீதிகளில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் சிவகுமார், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா இருவரும் சேர்ந்து, பெங்களூரை நாசமாக்கி விட்டனர். நகரின் பல பகுதிகளும் குப்பை காடாக காட்சி அளிக்கிறது. இதை கூட சரிசெய்ய முடியாமல், ‘பிராண்ட் பெங்களூரு’ என, ஆளுங்கட்சியினர் பேசுவது அபத்தமானது.

பெங்களூரில், 21 கழிவு மேலாண்மை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், வெறும் 5 திட்டங்களை செயல்படுத்த மட்டுமே பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான காரணத்தை சிவகுமார் தெரிவிக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை. இதனால், அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஒப்பந்ததாரர்களிடம் பேச்சு நடத்தி, பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இப்பிரச்னையால் பெங்களூரு மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். குப்பையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் மக்கள் சாலையில் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

பிராண்ட் பெங்களூருவா அல்லது குப்பை பெங்களூரா என, சிவகுமார் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்விஷயத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர, வெற்று விளம்பரங்கள் செய்யக்கூடாது. பெங்களூரு அரசியல் விளையாட்டு மைதானம் கிடையாது. இதை காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us