முஸ்லிம்கள் பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் பிரசாரம்
முஸ்லிம்கள் பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் பிரசாரம்
ADDED : மார் 31, 2026 04:38 AM
தாவணகெரே: தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் சீனிவாஸ் தாஸ், ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
குறிப்பாக, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்யும் அவர், முஸ்லிம்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த நலத்திட்டங்கள் பற்றியும், முத்தலாக் தடையால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பற்றியும் எடுத்து கூறி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்படியும் கோரிக்கை வைக்கிறார். இந்நிலையில், சீனிவாஸ் தாஸுக்கு ஆதரவாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், எம்.பி.,க்கள் பசவராஜ் பொம்மை, கோவிந்த் கார்ஜோள், முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர், எம்.எல்.ஏ.,க்கள் சுனில்குமார், தீரஜ் முனிராஜ், ஹரிஷ், எம்.எல்.சி.,க்கள் பாரதி ஷெட்டி, எம்.ஜி.முலே, சுனில் வால்யாபுரே, முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா, முன்னாள் எம்.எல்.சி.,க்கள் நாராயணசாமி, சிவயோகிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா உட்பட பலர் இன்று பிரசாரம் செய்ய உள்ளனர்.
