/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி கர்நாடகாவில் பா.ஜ., கொண்டாட்டம்
/
டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி கர்நாடகாவில் பா.ஜ., கொண்டாட்டம்
டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி கர்நாடகாவில் பா.ஜ., கொண்டாட்டம்
டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி கர்நாடகாவில் பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : பிப் 08, 2025 09:20 PM

பெங்களூரு: டில்லி சட்டசபைத் தேர்தலில், அமோக வெற்றி பெற்றதால், கர்நாடக பா.ஜ.,வினர் வெற்றி விழா கொண்டாடினர். பட்டாசு வெடித்து, இனிப்பு கொடுத்தனர்.
டில்லி சட்டசபை தேர்தல் முடிவு, நேற்று வெளியானது. பா.ஜ., வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இது கர்நாடக பா.ஜ.,வில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இத்தனை நாட்களாக இருந்த கோஷ்டி பூசலை ஓரங்கட்டி, அனைவரும் வெற்றி விழா கொண்டாடினர்.
பெங்களூரின், மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். துடைப்பம் பிடித்து துாய்மை பணியில் ஈடுபட்டு, நுாதன முறையில் வெற்றி விழாவை கொண்டாடினர்.
மேளம் கொட்டி, கோஷம் போட்டு, காவி கொடியை பிடித்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொண்டர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெற்றி கோஷமிட்டனர்.
மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி, எம்.எல்.சி., ரவி, எம்.எல்.ஏ.,க்கள் முனிரத்னா, விஸ்வநாத், ராமமூர்த்தி, கோபாலய்யா, பைரதி பசவராஜ் உட்பட, பலர் வெற்றி விழாவில் பங்கேற்றனர்.
டில்லி சட்டசபை தேர்தல் முடிவு வெளியானவுடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
டில்லியில் 27 ஆண்டுகளுக்கு பின், பா.ஜ., அமோக வரவேற்பு பெற்றுள்ளது. டில்லியின் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், வாக்களர்களுக்கு எங்களின் வாழ்த்துகள். ஊழல் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முகமூடி கழன்றுள்ளது. ஆம் ஆத்மியின் சாயம் வெளுத்துள்ளது.
விஜயேந்திரா,
மாநில தலைவர், பா.ஜ.,