/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வருக்கு பா.ஜ., கண்டனம்
/
பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வருக்கு பா.ஜ., கண்டனம்
பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வருக்கு பா.ஜ., கண்டனம்
பிரதமர் மோடியை விமர்சித்த முதல்வருக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : பிப் 11, 2026 05:50 AM

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டதற்கு, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா தனது, 'எக்ஸ்' பக்கத்தில், 'ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளிக்க, பார்லிமென்டிற்கு பிரதமர் மோடி வரவில்லை. இது, லோக்சபாவை அவமதிக்கும் செயலாகும்.
நமது வரலாற்றில் முதல் முறையாக பிரதமரின் பதில் இல்லாமல், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பிரதமர் தனது பொறுப்புகளை தட்டிக் கழிக்கிறார்' என்று கூறப்பட்டு உள்ளது.
இதற்கு பதிலடியாக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமர் எங்கும் தப்பி ஓடவில்லை. அவர், ராஜ்யசபாவில் உரையாற்றினார். காங்கிரஸ் கட்சியினர் லோக்சபாவில் செய்யும் அடாவடிகளை எடுத்துரைத்தார். தலைமறைவு என்பது காங்கிரசுக்கு தான் கைவந்த கலை. கடந்த சில மாதங்களாக, முதல்வர் பதவி குறித்த பிரச்னை நடக்கிறது. இந்த பிரச்னைக்கே உங்கள் தலைவர் ராகுலால் பதில் கூற முடியவில்லை. ராகுலை சந்திக்க துணை முதல்வர் சிவகுமார், பல முயற்சிகளை எடுத்து வருகிறார். சிவகுமார் டில்லியிலே சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து ராகுல் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடியுங்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறியதாவது:
நாட்டின் பிரதமரை அவதுாறாக விமர்சித்த, முதல்வர் சித்தராமையா முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுலை சமாதானம் செய்வதற்கு சித்தராமையா இப்படி பேசுகிறாரா அல்லது அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?
காங்கிரஸ் தலைவர்களின் நாக்கில் இருந்து சமீப காலமாக, ஆபாசமான வார்த்தைகளே வருகின்றன. மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். மாநில அரசின் கருவூலம் காலியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

