தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இருக்கையில் இருந்து சபாநாயகர் எழுந்த விவகாரம் முதல்வர் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல் 

 இருக்கையில் இருந்து சபாநாயகர் எழுந்த விவகாரம் முதல்வர் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல் 

 இருக்கையில் இருந்து சபாநாயகர் எழுந்த விவகாரம் முதல்வர் மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல் 


ADDED : மார் 17, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சபாநாயகர் காதர், இருக்கையில் இருந்து எழுந்து சென்ற விவகாரத்தில், மாநில மக்களிடம் முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது, 'எக்ஸ்' சமூக வலைதள பதிவு:

காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற தன்மையால், தன் நாற்காலியில் இருந்து சபாநாயகர் எழுந்து சென்றது, சட்டசபை வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம்.

மாநில அரசின் நிர்வாக இயந்திரம் எவ்வளவு செயலிழந்து உள்ளது என்பதற்கு சான்று. எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியாத திறமையற்ற அமைச்சர்களை வைத்து, அரசு நடக்கிறது.

சபாநாயகர் நான்கு முறை எச்சரித்தும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் சபைக்கு வருவது இல்லை.

அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் அரசியலமைப்பு உயிருடன் உள்ளதா என்று, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்ல; மாநில மக்களும் கேட்கின்றனர்.

ஊழல் நிறைந்த அரசு தன் செயலற்ற தன்மையால், சபாநாயகர் நாற்காலியை அவமதித்து உள்ளது. இதனை ஏற்கவே முடியாது. இது, ஜனநாயக கோவிலுக்கும், ஏழு கோடி கன்னடர்களுக்கும் செய்யும் துரோகம்.

மக்கள் பிரச்னைகளுக்கு பதில் அளிக்க முடியாத அரசு, ஆட்சியில் தொடர தார்மீக உரிமை இல்லை. அமைச்சர்கள் சட்டசபைக்கு வருவது இல்லை. அப்படியே வந்தாலும் எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை. சபாநாயகரை சமாதானப்படுத்த முதல்வர் கூட்டம் நடத்தினால் மட்டும் போதாது.

அமைச்சர்களின் ஒழுங்கீனத்திற்காக, மாநில மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கும்ப கர்ண துாக்கத்தில் இருந்து அமைச்சர்கள் எழுந்து வந்து, எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். மோசமான அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு விஜயேந்திரா கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us