/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூணுால் விவகாரத்தில் மாநில அரசு மீது மனித உரிமை ஆணையத்தில் பா.ஜ., புகார்
/
பூணுால் விவகாரத்தில் மாநில அரசு மீது மனித உரிமை ஆணையத்தில் பா.ஜ., புகார்
பூணுால் விவகாரத்தில் மாநில அரசு மீது மனித உரிமை ஆணையத்தில் பா.ஜ., புகார்
பூணுால் விவகாரத்தில் மாநில அரசு மீது மனித உரிமை ஆணையத்தில் பா.ஜ., புகார்
ADDED : ஏப் 25, 2025 10:09 PM

பெங்களூரு: பூணுால் விவகாரத்தில் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் அசோக் புகார் அளித்துள்ளார்.
மாநிலத்தில் கடந்த 17ம் தேதி தொழில்நுட்ப படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடந்தது. பீதர், சாஸ் ஸ்பூர்த்தி கல்லுாரி தேர்வு மையத்தில், சுசிவ்ரித் குல்கர்னி என்ற மாணவர் தேர்வு எழுத வந்தார்.
அப்போது, அவரை சோதனை செய்த அதிகாரிகள், மாணவர் பூணுால் அணிந்திருப்பதை கண்டறிந்தனர். பூணுாலை அகற்றும்படி கூறினர். ஆனால், சுசிவ்ரித் குல்கர்னி மறுத்துவிட்டார்.
இதனால், அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இது மாநில அளவில் பேசும் பொருளாக மாறியது. பிராமண சங்கங்கள், எதிர்க்கட்சியான பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதேபோன்று மாநிலத்தின் சில இடங்களிலும் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தன் 'எக்ஸ்' பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவு:
மாநிலத்தில் நடந்த பொது நுழைவுத் தேர்வில், பூணுாலை கழற்றுமாறு கூறி மாணவர்கள் மீது மத ரீதியான தாக்குதல் அரங்கேறி உள்ளது. தேர்வின்போது மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் நடந்த மாநில அரசின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்.
ஹிந்து பெண்களிடம் தாலி, வளையல், கொலுசுகளை கழற்றுமாறு தேர்வு அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது போன்ற சம்பவங்களால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களால் சரியாக தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகிறது.
அனைவருக்கும் சட்டப்படி ஒரே விதிகளை கொண்டு வர வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

