தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாவணகெரே தெற்கில் காவி கொடி பறக்க விட பா.ஜ.,வுக்கு வாய்ப்பு

 தாவணகெரே தெற்கில் காவி கொடி பறக்க விட பா.ஜ.,வுக்கு வாய்ப்பு

 தாவணகெரே தெற்கில் காவி கொடி பறக்க விட பா.ஜ.,வுக்கு வாய்ப்பு


ADDED : மார் 25, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கிரசில் ஏற்பட்டு உள்ள அதிருப்தியால், தாவணகெரே தெற்கில் முதல்முறையாக காவி கொடி பறக்க விட, பா.ஜ.,க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா மறைவால், தாவணகெரே தெற்கு தொகுதிக்கு அடுத்த மாதம், 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இத்தொகுதி, 2008க்கு முன்னர் வரை தாவணகெரே தொகுதியாக இருந்தது. 1952 முதல் 2004 வரை நடந்த, 12 தேர்தல்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று முறையும், பிரஜா சோசலிஸ்ட் கட்சி மற்றும் சுயேச்சை தலா ஒரு முறையும், காங்கிரஸ் ஏழு முறையும் வெற்றி பெற்றன.

இதில், சாமனுார் சிவசங்கரப்பா, 1994 தேர்தலில் சுயேச்சையாக வென்றார். 1999 தேர்தலில் சிவசங்கரப்பா மகன் மல்லிகார்ஜுன் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். 2004 தேர்தலில் சாமனுார் சிவசங்கரப்பா காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி வாகை சூடினார்.

கடந்த, 2008ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பின், 2008, 2013, 2018, 2023 தேர்தலில் சிவசங்கரப்பாவே தொடர்ந்து வெற்றி பெற்றார். இதன்மூலம் இத்தொகுதியில், தேசிய கட்சியான பா.ஜ.,வும், மாநில கட்சியான ம.ஜ.த.,வும் ஒரு முறை கூட வெற்றி பெற முடியவில்லை.

முஸ்லிம் ஓட்டு பா.ஜ., இங்கு வலுவாக இருந்தாலும், சிவசங்கரப்பாவை அசைக்க முடியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் அவருக்கு எதிராக, லிங்காயத் வேட்பாளர்களை நிறுத்தினாலும் எதுவுமே செய்ய முடியவில்லை.

அதற்கு காரணம் முஸ்லிம் ஓட்டுகள் தான். இங்கு யார் வெற்றி பெற வேண்டும் என்பதே தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஓட்டுகள் சிதறாமல் அப்படியே விழுந்ததால், சிவசங்கரப்பா வெற்றி பெற்றார்.

இம்முறை கள நிலவரம் மாறி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளரான சிவசங்கரப்பா பேரன் சமர்த் எளிதில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. முஸ்லிம் சமூகத்திற்கு சீட் கிடைக்காததால், காங்கிரஸ் பிரமுகர் சாதிக் பயில்வான், சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

யார் என்ன சொன்னாலும் களத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார். பா.ஜ.,வும் இம்முறை எஸ்.டி., சமூகத்தின் சீனிவாஸ் தாஸ் கரியப்பாவை களம் இறங்கி உள்ளது. பிற்படுத்த சமூக ஓட்டுகளை அவர் கவர அதிக வாய்ப்பு உள்ளது.

வெற்றி பெறாது பெரும்பாலான முஸ்லிம்கள் ஓட்டு சாதிக் பயில்வானுக்கு விழும் என்று கணிக்கப்படுகிறது. லிங்காயத் சமூக ஓட்டுகளை நம்பியே முழுக்க, முழுக்க சமர்த் களத்தில் உள்ளார். சீனிவாஸ் தாஸ் கரியப்பாவை வெற்றி பெற வைக்க, தாவணகெரே பா.ஜ., தலைவர்கள் அதிருப்தியை மறந்து ஒன்று கூடி உள்ளனர்.

இவர்களில் லிங்காயத் சமூகத்தின் சித்தேஸ்வர், ரேணுகாச்சார்யா முக்கிய தலைவர்களாக உள்ளனர்.

கூட்டி கழித்து பார்த்தால், இம்முறை தாவணகெரே தெற்கில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டால், காவி கொடி பறப்பது உறுதி.

ஆனால், கடைசி நேரத்தில் பா.ஜ., தலைவர்கள் ஏதாவது உள்ளடி வேலை பார்த்து, சீனிவாஸ் தாஸ் கரியப்பா தோற்றால், இனி ஒரு போதும் தாவணகெரே தெற்கில் பா.ஜ., வெற்றி பெறாது என, அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us