/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பேளூரு கோபாலகிருஷ்ணாவுக்கு பா.ஜ., ஹாலப்பா எச்சரிக்கை
/
பேளூரு கோபாலகிருஷ்ணாவுக்கு பா.ஜ., ஹாலப்பா எச்சரிக்கை
பேளூரு கோபாலகிருஷ்ணாவுக்கு பா.ஜ., ஹாலப்பா எச்சரிக்கை
பேளூரு கோபாலகிருஷ்ணாவுக்கு பா.ஜ., ஹாலப்பா எச்சரிக்கை
ADDED : ஜன 26, 2026 04:46 AM

பெங்களூரு: சாகரா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேளூரு கோபால கிருஷ்ணா மீது, 5 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஹரதாளு ஹாலப்பா முடிவு செய்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எம்.எல்.ஏ., பேளூரு கோபாலகிருஷ்ணா அவ்வப்போது, சிகந்துார் கோவிலை பற்றி பேசுகிறார். நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, இந்த கோவிலை ஹிந்து அற நிலையத்துறையில் சேர்க்க முயற்சித்ததாக, பொய் சொல்கிறார்.
நான் எப்போதும் சிகந்துார் கோவிலை, அறநிலையத்துறையில் சேர்க்க முயற்சித்தது இல்லை. இது குறித்து நான் கனவிலும் நினைக்கவில்லை.
என் தாய், தந்தை, தாத்தா, பாட்டி அந்த காலத்தில் இருந்தே, சிகந்துார் கோவில் பக்தர்கள். நானும் கூட அந்த கோவிலின் பக்தன். எப்போதும் கோவிலுக்கு ஆதரவாக நின்றுள்ளேன். கோவிலை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும்படி, நான் வலியுறுத்தியது இல்லை.
என் மீதான குற்றச்சாட்டை மறுத்தும், பேளூரு கோபால கிருஷ்ணா, அவ்வப்போது குற்றம்சாட்டுகிறார். கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். என் மீது தவறான எண்ணம் தோன்றும் வகையில் குற்றம்சாட்டி, என் கவுரவத்தை குலைக்கிறார். என் மானத்தை ஏலம் விடுகிறார். எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
இது குறித்து, பேளுரு கோபால கிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், 5 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்வேன்.
இவ்வாறு அவர்கூறினார்.

