sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சபாநாயகர் காதர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை: பா.ஜ., வலியுறுத்தல்

/

சபாநாயகர் காதர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை: பா.ஜ., வலியுறுத்தல்

சபாநாயகர் காதர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை: பா.ஜ., வலியுறுத்தல்

சபாநாயகர் காதர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை: பா.ஜ., வலியுறுத்தல்


ADDED : அக் 29, 2025 02:51 AM

Google News

ADDED : அக் 29, 2025 02:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''சபாநாயகர் காதர் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து, நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்,'' என, முன்னாள் சபாநாயகரும், உத்தர கன்னடா பா.ஜ., - எம்.பி.,யுமான விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காங்கிரஸ் ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளாக, காதர் சபாநாயகராக உள்ளார். இவரது பதவிக் காலத்தில் நிறைய ஊழல் நடந்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அனைத்தும், மங்களூரை சேர்ந்தவர்களுக்கு மட்டும் டெண்டர் கொடுக்கப்படுகிறது. இது ஏன் என்பது பற்றி சபாநாயகர் அலுவலக அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

அவசர தேவை இல்லா விட்டாலும், சட்டசபை அலுவலகத்திற்கு அவசர, அவசரமாக பொருட்களை வாங்குகின்றனர். எனக்கு கிடைத்த தகவல்படி, சட்டசபை அலுவலகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான, பல கொள்முதல் டெண்டர்களை நிதித்துறை நிராகரித்துள்ளது. ஆனாலும் நிதி துறை அமைச்சரான, முதல்வர் சித்தராமையா, பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டசபை அரங்கில் புதிய தொலைக்காட்சி பெட்டி நிறுவப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்களுக்கு 'கண்டபேருண்டா' எனும் இரண்டு தலை கொண்ட வலிமையான பறவையின் உருவம் கொண்ட கைக்கடிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வு எடுக்க 'மசாஜ் சேர்' கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? கூட்டத்தொடரின்போது எம்.எல்.ஏ.,க்களுக்கு உணவு, சிற்றுண்டி ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

எம்.எல்.ஏ.,க்கள் தங்கும் விடுதிக்கு பாதுகாப்பு 'லாக்கர்'களை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளனர். படுக்கை விரிப்பு, கம்பளங்களை மாற்றி உள்ளனர். விதான் சவுதாவில் நடந்த புத்தக கண்காட்சிக்கு 4.50 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இவர்கள் என்ன வேலை செய்தாலும் சந்தேகம் உள்ளது.

சபாநாயகர் காதர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். பதவியேற்ற பின், எத்தனை நாடுகளுக்கு அவர் சென்றார்? எவ்வளவு அரசு பணத்தை செலவு செய்தார் என, அனைத்து விபரத்தையும் அரசு வெளியிட வேண்டும். அவர் தன் பதவியின் கண்ணியம், மரியாதையை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ளவில்லை.

சட்டசபை அலுவலகத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல் குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us