தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உள் இடஒதுக்கீட்டில் குழப்பம் அரசுக்கு பா.ஜ., கடும் எச்சரிக்கை

 உள் இடஒதுக்கீட்டில் குழப்பம் அரசுக்கு பா.ஜ., கடும் எச்சரிக்கை

 உள் இடஒதுக்கீட்டில் குழப்பம் அரசுக்கு பா.ஜ., கடும் எச்சரிக்கை


ADDED : மார் 14, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''உள் இடஒதுக்கீட்டில் நிலவும் குழப்பத்தை சரி செய்யாவிட்டால், அரசுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும்,'' என, ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கர்நாடகாவில், 56 சதவீத உள்இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கேட்கிறோம். இதுகுறித்து விவாதிக்க வரும், 27ம் தேதி சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்தப்படும் என, உணவுத்துறை அமைச்சர் முனியப்பா அறிவித்து உள்ளார். அதுவரை நாங்கள் பொறுமை யாக இருப்போம். நியாயம் கிடைக்கவில்லை என்றால், அரசுக்கு எதிராக பிரமாண்ட போராட்டம் நடத்தப்படும்.

எஸ்.சி., சமூகத்திற்கான, 17 சதவீத இடஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. நாடோடி சமூகத்தை கைவிட்டு உள்ளனர். பிற்படுத்தப்பட்ட சமூக ங்களின் தலைவர் என்று தன்னை கூறி கொள்ளும், முதல்வர் சித்தராமையா, அச்சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும்.

எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்களுக்காக ஒதுக்கிய நிதியை, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றனர். இதை விட பெரிய அநீதி எதுவும் இல்லை. கடந்த பட்ஜெட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட 441 கோடி ரூபாயும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒதுக்கி உள்ளனர். கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு எந்த நிதியும் அறிவிக்கவில்லை.

உள்இடஒதுக்கீடு என்பது சட்டம். அதை நிறைவேற்ற கவர்னரும் ஒப்புதல் அளித்து உள்ளார். அரசியல் செய்வது சரியல்ல. நாகமோகன் தாஸ் தலைமையிலான குழுவை, காங்கிரஸ் அரசு தான் அமைத்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை இவர்களால் செயல்படுத்த முடியவில்லை. சிலரின் அழுத்தத்திற்கு சித்தராமையா அடிபணிந்து உள்ளார். அவரால் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியவில்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us