/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவசங்கரப்பா குடும்பத்தினர் மீது பா.ஜ., நில ஆக்கிரமிப்பு புகார்
/
சிவசங்கரப்பா குடும்பத்தினர் மீது பா.ஜ., நில ஆக்கிரமிப்பு புகார்
சிவசங்கரப்பா குடும்பத்தினர் மீது பா.ஜ., நில ஆக்கிரமிப்பு புகார்
சிவசங்கரப்பா குடும்பத்தினர் மீது பா.ஜ., நில ஆக்கிரமிப்பு புகார்
ADDED : அக் 25, 2025 11:05 PM

தாவணகெரே: ''காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தினர், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர்,'' என, ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் குற்றஞ்சாட்டினார்.
தாவணகெரேவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தாவணகெரே மற்றும் விஜயநகரா எல்லைப்பகுதியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஷாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தினருக்கு சொந்தமான ஷாமனுார் சர்க்கரை ஆலை, நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஓடையை மூடியுள்ளனர். இது பற்றி சட்டசபையிலும் நான் விவரித்தேன். நிலத்தை மீட்கும்படி தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளேன்.
என் புகாரின்படி, தாவணகெரேவின் சிக்கபிதரி, விஜயநகராவின், ஹரப்பனஹள்ளியின், துக்காவதியில் சர்வே நடத்தும்படி தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். நாளை சர்வே துறை இணை செயலர் தலைமையில் ஆய்வு நடக்கும். ஆய்வு நடப்பதை அறிந்து, ஓடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சிவசங்கரப்பா குடும்பத்தினரை விடமாட்டேன். மல்லிகார்ஜுன கார்கே, வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது, ஷாமனுார் கிராமத்தின் நிலத்தை அபகரிக்க, சிவசங்கரப்பா குடும்பம் முயற்சித்தது. அப்போதும் போராட்டம் நடத்தி, விவசாயிகளின் நிலத்தை காப்பாற்றினேன். இப்போதும் என் போராட்டம் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

