/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான நிலைப்பாடு செல்லுபடியாகாது'
/
'ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான நிலைப்பாடு செல்லுபடியாகாது'
'ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான நிலைப்பாடு செல்லுபடியாகாது'
'ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான நிலைப்பாடு செல்லுபடியாகாது'
ADDED : அக் 25, 2025 11:05 PM

பெங்களூரு: ''ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான மாநில அரசின் நிலைப்பாடு, நீதிமன்றத்திலும் செல்லுபடியாகாது,'' என, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக மாநில அரசின் நிலைபாடு, நீதிமன்றத்திலும் செல்லுபடியாகாது. ஆர்.எஸ்.எஸ்., நடவடிக்கைகளில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது ஒரு சுதந்திர நாடு. பேச்சு சுதந்திரம், தனிப்பட்ட சுதந்திரம், சமூகம் மற்றும் மத சுதந்திரம் உள்ளது.
சாலையில் ஊர்வலமாக செல்ல எல்லோருக்கும் அனுமதி உண்டு. இதற்கு அனைத்து அமைப்புகளும் அனுமதிக்கப்பட வேண்டும். சாலை ஊர்வலங்களை அனுமதிப்பதில் நீதிமன்றம் சரியான முடிவு எடுத்துள்ளது.
நவ., 2ல் சாலை ஊர்வலத்துக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு எச்சரித்துள்ளது. அமைதி, ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்டும்; வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
அரசின் உத்தரவால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தால் யாராவது பாதிக்கப்பட்டனரா? சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்க அரசு முயற்சிக்கிறது.
மொஹரத்தில் இரும்பு சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொள்வது சரியா? உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் மத நம்பிக்கைகள் உள்ளன. அரசு, அவர்களுக்கு தீங்கு விளைவிப்பது சரியல்ல. மாநிலத்தில் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்பதை விடுத்து, மக்களை தவறாக திசை திருப்புகின்றனர்.
மாநில அரசு நிதி நெருக்கடியில் இருப்பதை மறைக்க, பா.ஜ., - எம்.பி.,க்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில் மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்கு 5,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விடுவிக்கப்படவில்லை. எங்கள் ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதை விட அதிகளவில் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

