தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., பிரமுகர் அன்வர் மணிப்பாடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் 

பா.ஜ., பிரமுகர் அன்வர் மணிப்பாடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் 

பா.ஜ., பிரமுகர் அன்வர் மணிப்பாடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் 


ADDED : ஏப் 05, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மங்களூரு : கர்நாடக சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் தலைவரும், பா.ஜ., பிரமுகருமான அன்வர் மணிப்பாடிக்கு வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளது.

மங்களூரை சேர்ந்தவர் அன்வர் மணிப்பாடி. பா.ஜ., பிரமுகர். கடந்த 2012ல் பா.ஜ., ஆட்சியில், கர்நாடக சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இருந்தார்.

அந்த நேரத்தில், வக்ப் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வக்ப் வாரியம் நோட்டீஸ் அனுப்பிய பிரச்னை, மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசுக்கு எதிராக பா.ஜ., போராட்டம் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் சித்தராமையா கூறும்போது, 'கடந்த 2012ல் பா.ஜ., ஆட்சியின் போது, தற்போதைய பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, வக்ப் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளார்' என்று, அன்வர் மணிப்பாடி அறிக்கையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இதை மறுத்த அன்வர் மணிப்பாடி, 'அப்படி அறிக்கை கொடுக்கவே இல்லை. முதல்வர் பொய் சொல்கிறார்' என்று விளக்கம் அளித்தார்.

வக்ப் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தனது கருத்தை கூறி இருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபாவில் மத்திய அரசு, வக்ப் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்தியது.

அப்போது அன்வர் மணிப்பாடியில் அறிக்கையில் கூறப்பட்டு இருந்த சில அம்சங்களை முன்வைத்து பேசப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அன்வர் மணிப்பாடிக்கு, வெளிநாடுகளில் இருந்து சில போன் அழைப்புகள் வந்துள்ளன.

எதிர்முனையில் பேசியவர்கள், 'நீண்ட காலம் நீ உயிருடன் இருக்க மாட்டாய். துரோகம் செய்யும் உன்னை சமூகம் ஒரு போதும் மன்னிக்காது' என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வாலிடம், அன்வர் மணிப்பாடி நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us