/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., பிரமுகர் தற்கொலை குடும்ப பிரச்னையால் விரக்தி
/
பா.ஜ., பிரமுகர் தற்கொலை குடும்ப பிரச்னையால் விரக்தி
பா.ஜ., பிரமுகர் தற்கொலை குடும்ப பிரச்னையால் விரக்தி
பா.ஜ., பிரமுகர் தற்கொலை குடும்ப பிரச்னையால் விரக்தி
ADDED : ஜன 12, 2026 06:53 AM

தாவணகெரே: குடும்ப பிரச்னையால், காருக்குள் அமர்ந்து தீ வைத்து பா.ஜ., பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
தாவணகெரே நகரின், வித்யா நகரில் வசித்து வந்தவர் சந்திரசேகர் சங்கோலி, 52. இவர் தாவணகெரே மாநகராட்சியின் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர். மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர். வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர், பொது சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.
கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபாடு உள்ளவர். தாவணகெரே பா.ஜ.,வில் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது. ஷாமனுார் கிராமத்தில் சிமென்ட், இரும்பு கடை நடத்துகிறார்.
பாக்கு தோட்டம், காம்பிளக்ஸ்கள் உட்பட பல சொத்துக்களை வைத்துள்ளார். சமீப நாட்களாக குடும்ப பிரச்னை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு மகன் நரேஷ், 20, மகள் பவித்ரா, 23, உடன் ஏதோ காரணத்தால், வாக்குவாதம் நடந்தது. அதன்பின் சந்திரசேகர் சங்கோலி, அங்கிருந்து வெளியே சென்றனர்.
அதன்பின் மகளும், மகனும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.
இதை கவனித்த அப்பகுதியினர், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, சந்திரசேகர் சங்கோலிக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்று காலையில் அடையாளம் தெரியாத நபர், காருடன் எரிந்து கிடப்பதை பார்த்த சிலர், ஹதடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், விசாரணை நடத்திய போது, காரில் இறந்து கிடந்தது, பா.ஜ., பிரமுகர் சந்திரசேகர் சங்கோலி என்பது தெரிந்தது. உடலை மீட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
மகனும், மகளும் தற்கொலைக்கு முயற்சித்ததை அறிந்த சந்திரசேகர், தாவணகெரே புறநகரின், நாகநுார் கிராமம் அருகில் உள்ள தன் தோட்டத்துக்கு காரில் வந்தார்.
காரை அங்கு நிறுத்தி, அதற்குள் அமர்ந்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

