/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பலாத்காரம் செய்த 'சைக்கோ' சிறுமி கொலை வழக்கில் 'திடுக்'
/
பலாத்காரம் செய்த 'சைக்கோ' சிறுமி கொலை வழக்கில் 'திடுக்'
பலாத்காரம் செய்த 'சைக்கோ' சிறுமி கொலை வழக்கில் 'திடுக்'
பலாத்காரம் செய்த 'சைக்கோ' சிறுமி கொலை வழக்கில் 'திடுக்'
ADDED : ஜன 12, 2026 06:53 AM

ஒயிட்பீல்டு: பெங்க ளூரில் 6 வயது சிறுமியின் கழுத்தை இறுக்கி கொன்ற வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. பலாத்காரம் செய்து கொன்றதாக, கைதான சைக்கோ வாலிபர், போலீசார் முன் 'பகீர்' தகவல் கூறி உள்ளார்.
பெ ங்களூரு ஒயிட்பீல்டு அருகே நல்லுாரஹள்ளியில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு 6 வ யதில் மகள் இருந்தார். கடந்த 5ம் தேதி மதியம், சிறுமி மாயமானார். மறுநாள் காலையில் சாக்கடை கால்வாயில் இருந்து சிறுமி உடல் மீட்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவை சேர்ந்த யூசுப் அலி, 30 கைது செய்யப்பட்டார்.
நல்லுாரஹள்ளி பகுதியில் சைக்கோ போல சுற்றித்திரிந்த இவர், குழந்தைகளுக்கு சாக்லேட், கேக் வாங்கி கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரிந்தது.
கடந்த 1ம் தேதி கொல்கட்டாவில் தனது வீட்டின் அருகே வசிக்கும், தம்பதியின் குழந்தையையும் கொன்ற அவர், பெங்களூருக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை கொலை செய்வதற்கு முன்பு, பலாத்காரம் செய்ததை ஒப்பு கொண்டு உள்ளார்.
சாக்லேட் தருவதாக அழைத்து சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பலாத்காரம் செய்து விட்டு, வெளியே கூறி விடுவார் என்று நினைத்து, பிளாஸ்டிக் ஒயரால் கழுத்தை இறுக்கி, சிறுமியை கொன்று உள்ளார்.
பின், சாக்கு மூட்டையில் உடலை கட்டி வீசி சென்று உள்ளார். குழந்தைகளை குறி வைத்து பலாத்காரம் செய்யும் மனநிலை கொண்ட இவர் மீது, கொல்கட்டாவில் 2 சிறுமியரை பலாத்காரம் செய்த வழக்குகள் உள்ளன.

