/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் பதவிக்கு குதிரை பேரம் நடக்கும் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு
/
முதல்வர் பதவிக்கு குதிரை பேரம் நடக்கும் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு
முதல்வர் பதவிக்கு குதிரை பேரம் நடக்கும் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு
முதல்வர் பதவிக்கு குதிரை பேரம் நடக்கும் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு
ADDED : ஜூலை 02, 2025 11:17 PM

பெங்களூரு: “முதல்வர் பதவிக்கான குதிரை பேரம், வரும் நாட்களில் தீவிரம் அடையும். பா.ஜ., தலைவர் பதவி காலியாக இல்லை,” என, விஜயேந்திரா கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஊழல் நிறைந்த மாநில காங்கிரஸ் அரசை மக்கள் அகற்ற உள்ளனர் என, அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு தெரிந்திருந்தும், அதை பற்றி அவர் கவலைப்படவில்லை.
முதல்வர் சித்தராமையாவிடம் ராஜினாமா கடிதம் வாங்கத் தான், மேலிட பொறுப்பாளர் இங்கு வந்தார். எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி கருத்தை கேட்டுள்ளார்.
காங்கிரசில் முதல்வர் பதவிக்கான போட்டி அதிகரித்துள்ளது. சிவகுமார் 200 சதவீதம் முதல்வர் ஆவார் என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., இக்பால் ஹுசைன் கூறுகிறார்.
மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.பாட்டீல், ராஜு காகே, முதல்வருக்கு எதிராக பேசுகின்றனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கையை சித்தராமையா இழந்து விட்டார்.
முதல்வர் பதவிக்கான குதிரை பேரம் வரும் நாட்களில் தீவிரம் அடையும். இதை தடுப்பதில் கவர்னர் கவனம் செலுத்த வேண்டும்.
வேடிக்கை
ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்பால் மக்கள் தொடர்ந்து இறப்பதற்கு, கொரோனா தடுப்பூசி காரணம் என்று, சித்தராமையா கூறி உள்ளார்.
ஹாசன் மக்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி போடப்பட்டதா? நாட்டில் வேறு எங்கும் போடவில்லையா? பல நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஹாசனில் இனியும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுப்பற்ற முறையில் முதல்வர் பேச கூடாது.
சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு கூட, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு மட்டும் நம்பிக்கை உள்ளது என்று நினைக்கிறேன்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று, பிரியங்க் கார்கே கூறி உள்ளது வேடிக்கையாக உள்ளது.
ராஜினாமா
ஆர்.எஸ்.எஸ்., தேச பக்தி அமைப்பு. இந்தியா - சீனா போரின்போது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை பிரதமராக இருந்த நேருவே பாராட்டினார்.
பொறுப்பான பதவியில் இருக்கும் பிரியங்க் கார்கே, முதிர்ச்சியற்ற அறிக்கை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பா.ஜ., போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
நாங்கள் நடத்திய போராட்டத்தால் தான், அமைச்சர் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்தார். நிதித்துறை அனுமதி இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. முதல்வரும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
பாவ குடம்
காங்கிரஸ் ஆட்சியில் ஹிந்து ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஸ்ரீராம சேனை தொண்டர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
பசுக்களின் மடி அறுக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அரசின் பாவ குடம் நிரம்பி வழிகிறது. ஆட்சி நடத்துபவர்களை மக்கள் சபித்து வருகின்றனர்.
கர்நாடக பா.ஜ., தலைவர் பதவி, காலியாக இல்லை. பதவி காலியாக உள்ளது என்று யாரும் சொல்லவும் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறேன்.
எனது பணியில் மேலிடம், தொண்டர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.