/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியை கர்ப்பமாக்கிய பா.ஜ., பிரமுகர் மகன் ஓட்டம்
/
மாணவியை கர்ப்பமாக்கிய பா.ஜ., பிரமுகர் மகன் ஓட்டம்
ADDED : ஜூன் 29, 2025 11:09 PM

மங்களூரு: புத்துார் பா.ஜ., பிரமுகரின் மகன் கிருஷ்ணாஜிராவ் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரால் பலாத்காரத்துக்கு ஆளாகி, கர்ப்பமடைந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தட்சிணகன்னடா மாவட்டம், புத்துாரை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ஜெகந்நாத ராவ் மகன் கிருஷ்ணாஜி, 25. இவர் உயர் நிலை பள்ளியில் படிக்கும் போது, தன்னுடன் படித்த மாணவியுடன் நட்புடன் இருந்தார். கல்லூரிக்கு வந்த பின், இது காதலாக மாறியது.
மாணவி தற்போது மங்களூரின் தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., படிக்கிறார். 2024ன் அக்டோபர் 11ம் தேதியன்று, கிருஷ்ணாஜி ராவ், தன் வீட்டில் யாரும் இல்லாத போது, மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்றார். திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போன்று பல நாட்கள் நடந்தது.
இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்த விஷயத்தை கிருஷ்ணாஜி ராவிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மன்றாடினார். ஆனால், அவர் மறுத்தார்.
வேறு வழியின்றி தன் பெற்றோரிடம், மாணவி நடந்ததை கூறினார். பெற்றோரும், கிருஷ்ணாஜி ராவ் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, திருமண பேச்சு நடத்தினர்.
அவர்களும் ஒப்புக்கொண்டனர். ஆனால் மாணவியை திருமணம் செய்து கொள்ள முடியாது என, கிருஷ்ணாஜி ராவ் மறுக்கிறார்.
இது குறித்து, புத்துார் போலீஸ் நிலையத்தில், ஜூன் 24ம் தேதி மாணவி புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர். தன் மீது வழக்கு பதிவானதும், கிருஷ்ணாஜி தலைமறைவாகிவிட்டார். அவரை தேடுகின்றனர்.
இந்நிலையில் மாணவிக்கு, புத்துார் மருத்துவமனையில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பிறப்புக்கு காரணம் கிருஷ்ணாஜி ராவ் என்பதை உறுதி செய்து கொள்ள, டி.என்.ஏ., சோதனை செய்ய போலீசார் தயாராகின்றனர்.