/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா கோவில் அதிகாரிக்கு பா.ஜ., தலைவர்கள் ஆதரவு
/
தர்மஸ்தலா கோவில் அதிகாரிக்கு பா.ஜ., தலைவர்கள் ஆதரவு
தர்மஸ்தலா கோவில் அதிகாரிக்கு பா.ஜ., தலைவர்கள் ஆதரவு
தர்மஸ்தலா கோவில் அதிகாரிக்கு பா.ஜ., தலைவர்கள் ஆதரவு
ADDED : ஆக 18, 2025 03:19 AM

மங்களூரு : தர்மஸ்தலா வழக்கு பற்றி சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து பரப்பப்படும் நிலையில், மஞ்சுநாதா கோவிலில் பா.ஜ., தலைவர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட, பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படுவது பற்றி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
புகார்தாரர் அடையாளம் காட்டிய 20 இடங்களில் பள்ளம் தோண்டினர். ஒரு இடத்தில் எலும்புகள் கிடைத்ததை தவிர மற்ற இடங்களில் எதுவும் சிக்கவில்லை. இதனால் நேற்று முன்தினமே பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பணிகள் நடக்கவில்லை. புகார்தாரரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.
இதற்கிடையில் தர்மஸ்தலா வழக்கில் மஞ்சுநாதா கோவில், கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேவை பற்றி, சில சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக, பா.ஜ., வேதனை தெரிவித்து உள்ளது.
'தர்மஸ்தலாவுடன் நாங்கள் இருக்கிறோம்' என்று ஆளுங்கட்சியான காங்கிரசின் புத்திக்கு உரைக்கும் வகையில் சொல்வதற்காக, பெங்களூரு எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் தலைமையில் 400க்கும் மேற்பட்ட கார்கள், வாகனங்களில் காவி கொடி கட்டி நேற்று முன்தினம் பா.ஜ., தொண்டர்கள் சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வேதவியாஸ் காமத், பரத் ஷெட்டி, ஹரிஷ் பூஞ்சா, கிரண்குமார் கோட்கி, யஷ்பால் சுவர்ணா, குருராஜ் கந்திஹோலே, பாகிரதி முருள்யா, தட்சிண கன்னடா எம்.பி., பிரிஜேஷ் சவுதா உள்ளிட்ட தலைவர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின், கோவிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டேவை சந்தித்தனர்.
'தர்மஸ்தலா பற்றி சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதுாறுகளால் நீங்களால் சோர்வடைந்து விட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம். தர்மஸ்தலாவுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடக்கிறது. கண்ணுக்கு தெரியாத கைகள் பின்னணியில் உள்ளன. இதற்கு அரசும் உடந்தையாக உள்ளது. எஸ்.ஐ.டி., விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம்.
'இதன்மூலம் தர்மஸ்தலா வழக்கு தொடர்பான சந்தேகம் தீர்க்கப்படும் என்று நம்பினோம். ஆனால் இரண்டு வாரங்களாக பள்ளம் தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை கேட்டால், அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை. தர்மஸ்தலாவுக்கு எதிராக அவதுாறு பரப்புவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று, வீரேந்திர ஹெக்டேவிடம், பா.ஜ., தலைவர்கள் உறுதி அளித்தனர்.