/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண்ணுக்கு குறுந்தகவல்; பா.ஜ., - எம்.எல்.ஏ., மறுப்பு
/
இளம்பெண்ணுக்கு குறுந்தகவல்; பா.ஜ., - எம்.எல்.ஏ., மறுப்பு
இளம்பெண்ணுக்கு குறுந்தகவல்; பா.ஜ., - எம்.எல்.ஏ., மறுப்பு
இளம்பெண்ணுக்கு குறுந்தகவல்; பா.ஜ., - எம்.எல்.ஏ., மறுப்பு
ADDED : ஜன 08, 2026 05:59 AM

ஜெயநகர்: ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சி.கே.ராமமூர்த்தி, தனது சமூக வலைதளம் மூலம் இளம் பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பிய, 'ஸ்கிரீன் ஷாட்' படங்கள் வேகமாக பரவின. இதை மறுத்த எம்.எல்.ஏ., தனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக்' செய்துள்ளதாக' தெரிவித்து உள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் அனுஷ்கா. தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், ஜெயநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சி.கே.ராமமூர்த்தி, தினமும் தனக்கு, 'குட் மார்னிங், குட் நைட்' என்று அனுப்பிய குறுந்தகவலை பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், எம்.எல்.ஏ.,வை விமர்சித்தனர்.
இது குறித்து ராமமூர்த்தி கூறுகையில், ''எனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். இதுபோன்று எந்தவொரு தகவலும், யாருக்கும் அனுப்பவில்லை. என் கவுரவத்தை குலைக்க சதி நடக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிப்பேன்,'' என்றார்.
காங்கிரஸ் பிரமுகர் புஷ்பா மஞ்சுநாத், 'எக்ஸ்' தளத்தில், 'பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, இளம்பெண் ஒருவருக்கு தினமும் காலை, மாலையில் குட் மார்னிங், குட் நைட் குறுந்தகவல் அனுப்பி வருகிறார்.
ராமமூர்த்தி மாமா வீட்டில் அத்தை 'ஏரோபிளேன் மோடில்' உள்ளாரா' என விமர்சித்து உள்ளார்.

