அதிகாலையே திறக்கப்பட்ட 'பார்' பா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி சோதனை
அதிகாலையே திறக்கப்பட்ட 'பார்' பா.ஜ., - எம்.எல்.ஏ., அதிரடி சோதனை
ADDED : ஏப் 16, 2026 03:57 AM

ராஜாஜிநகர்: கலால் விதிமுறைகளை மீறி, நிர்ணயித்த நேரத்தை விட அதிகாலையே பார்கள் திறப்பதாக புகார் வந்ததால், ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் அதிகாலையிலேயே பாருக்கு சென்று சோதனை நடத்தினார்.
பார்கள் நிர்ணயித்த நேரத்தில் திறக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மூட வேண்டும் என்பது விதிமு றை.
ஆனால் பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள, 'பிரவீன் பார் அண்ட் ரெஸ்டாரென்ட்' நிர்ணயித்த நேரத்துக்கு முன்பே திறந்து, மதுபானம் விற்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகின்றனர் என பொது மக்கள், தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமாரிடம் புகார் அளித்தனர்.
இதை தீவிரமாக கருதிய சுரேஷ்குமார், நேற்று அதிகாலையே பிரவீன் பார் அண்ட் ரெஸ்டாரென்டுக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். அதிகாலையே பார் திறந்திருப்பது தெரிந் தது.
இதை பார்த்து கோபம் அடைந்த அவர், உடனடியாக மதுபான விற்பனையை நிறுத்தி, பாரை மூடும்படி உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.
நடப்பாண்டு பிப்ரவரியிலும் கூட, இந்த பார் விதிமுறைகளை மீறி, அதிகாலையே திறக்கப்பட்டது. அன்றைய தினமும் சுரேஷ்குமார் அங்கு வந்து, உரிமையாளரை எச்சரித்தார்.
ஆனால், அவர் பொருட்படுத்தவில்லை. குடியிருப்பு பகுதியிலேயே மதுபானம் விற்பதால், அப்பகுதி மக்களுக்கும், நடை பயிற்சி செய்வோரும் பாதிப்படைகின்றனர். பார் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர்.
சுரேஷ்குமார் கூறியதாவது:
கலால் விதிமுறைகளை மீறி, நிர்ணயித்த நேரத்தை விட முன்னதாகவே, பார் திறக்கப்படுகிறது. இன்று (நேற்று) நேரில் ஆய்வு செய்த போது தெரிந்தது. பார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீஸ் துறைக்கும், கலால்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
கலால் துறை அமைச்சரும், இந்த விஷயத்தில் தலையிட்டு, விதிமீறல்க ளை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப் போது தவறு செய்யும் பார்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
