/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சி.வி.ராமன்நகர் மக்கள் நன்மதிப்பை பெற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., எஸ்.ரகு
/
சி.வி.ராமன்நகர் மக்கள் நன்மதிப்பை பெற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., எஸ்.ரகு
சி.வி.ராமன்நகர் மக்கள் நன்மதிப்பை பெற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., எஸ்.ரகு
சி.வி.ராமன்நகர் மக்கள் நன்மதிப்பை பெற்ற பா.ஜ., - எம்.எல்.ஏ., எஸ்.ரகு
ADDED : செப் 30, 2025 05:44 AM

பெ ங்களூரு சி.வி.ராமன்நகர் சட்டசபை தொகுதியில் அதிகமான தமிழர்கள் பூர்வீகமாக வசிக்கின்றனர். பல தலைமுறையினர் சுய தொழிலும், வெவ்வேறு வேலையும் செய்து வருகின்றனர்.
இந்த தொகுதி உருவான 2008ம் ஆண்டு முதல் இதுவரை அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ., - எம்.எல்.ஏ., எஸ்.ரகு, தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தன்னை தேடி வரும் மக்களை அன்புடன் விசாரித்து, பிரச்னைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்து வருவது தான், அவரது தொடர் வெற்றிக்கு முக்கிய காரணம்.
கட்சி பணிகள், தொகுதி வளர்ச்சி பணிகளை சிறப்பாக செய்து, மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். துாய்மைக்கு முன்னுரிமை வழங்கி, துாய்மை சி.வி.ராமன்நகர் என்ற நிகழ்ச்சி மூலம், தொகுதியை குப்பை இல்லா நகரமாக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பெங்களூரு நகரிலேயே அதிகபட்சமாக, 50க்கும் அதிகமான பூங்காக்கள் உருவாக்கியுள்ளார். பைரசந்திரா ஏரி, கக்கதாசபுரா ஏரிகளை சிறப்பாக சீரமைத்து, சிறந்த சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளார்.
தமிழர்கள் நலன் காக்கும் வகையில், ஜீவன்பீமாநகரில் உள்ள ஆனந்தபுரத்தில் செயல்படும் அரசு தமிழ் தொடக்க பள்ளி, மர்பிடவுன் அரசு தமிழ் தொடக்க பள்ளி, காக்ஸ்டவுன் அரசு தமிழ் தொடக்க பள்ளியை தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகரமாக புதிதாக கட்டி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் கட்டட பணிகளை முடித்து, திறந்து வைக்க உள்ளார்.
சாலை, குடிநீர், தெரு விளக்கு உட்பட அடிப்படை வசதிகளுக்கு குறைவு இருக்க கூடாது என்று அதிகாரிகளுக்கு அவ்வப்போடு உத்தரவிட்டு, தானும் நேரில் சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எம்.எல்.ஏ., ரகுவின் தீவிர முயற்சியினால், ஏற்கனவே சி.வி.ராமன் பொது மருத்துவமனை, டயாபெடிக் மருத்துவ மையம் இயங்கி வருகின்றன. இதற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, 30.55 கோடி ரூபாயில், 100 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை மையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கினார். இதில், பாதி பணிகள் முடிந்துள்ளன.