தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருவிழாவில் ஆட்டம் போட்ட பா.ஜ.,  - எம்.எல்.சி., ரவி

 திருவிழாவில் ஆட்டம் போட்ட பா.ஜ.,  - எம்.எல்.சி., ரவி

 திருவிழாவில் ஆட்டம் போட்ட பா.ஜ.,  - எம்.எல்.சி., ரவி


ADDED : ஏப் 02, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 03:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் நடந்த அறுவடை திருவிழாவில், கிராம மக்களுடன் பா.ஜ., - எம்.எல்.சி., ரவி சகஜமாக ஆடி மகிழ்ந்தார்.

சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகரஹள்ளியில் அறுவடை திருவிழா, சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த திருவிழாவில் பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி தனது குடும்பத்துடன் பங்கேற்றார். ஊர்வலத்தில் மக்களுடன் மக்களாக சென்றார். அப்போது, பாரம்பரிய இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால், பலரும் நடனமாடி மகிழ்ந்தனர்.எதிர்பாராத விதமாக சி.டி.ரவியும் சகஜமாக ஆடத்துவங்கினார். தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் ஆடினார்.

இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆரவாரம் எழுப்பினர். அவர் ஆடுவதை தங்கள் மொபைல் போன்களில் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us