/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி போராட்டத்திற்கு வெற்றி
/
மெட்ரோ டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி போராட்டத்திற்கு வெற்றி
மெட்ரோ டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி போராட்டத்திற்கு வெற்றி
மெட்ரோ டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி போராட்டத்திற்கு வெற்றி
ADDED : பிப் 09, 2026 05:11 AM
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முழு காரணமாக இருந்த பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம், கடந்த ஆண்டு 71 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் நாட்டிலேயே விலையுயர்ந்த மெட்ரோவாக, பெங்களூரு மெட்ரோ மாறியது.
இந்நிலையில், டிக்கெட் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும், புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் மனோகர் லால் கட்டாரை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, மெட்ரோ ரயில் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதிகாரிகளின் தவறு இவரின் கோரிக்கையை மனோகர் ஏற்று கொண்டதாகவும்; புதிய கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தேஜஸ்வி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
ஆனால் 'கட்டண உயர்வு நிறுத்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை' என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
எதிர்பாராதவிதமாக நேற்று தேஜஸ்வி மெட்ரோ நிலையங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள பயணியரிடம் பேச்சு நடத்தினார்.
அப்போது, மெட்ரோ டிக்கெட் உயர்வுக்கு மாநில அரசே காரணம் எனவும், கட்டண நிர்ணய குழு பரிந்துரையில் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டினார்.
பயணியர் மகிழ்ச்சி பயணியரின் சிரமத்தை கேட்டறிந்தார். அவர்களிடம் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து எளிதில் புரியும்படி எடுத்துரைத்தார். இவ்வேளையில் அவர், கட்டண உயர்வு வேண்டாம் என்ற வாசகங்கள் பொருந்திய 'டி - ஷர்ட்டை' அணிந்து இருந்தார்.
இவரின் தொடர் போராட்டங்களுக்கு மெட்ரோ நிர்வாகம் பதில் சொல்லி ஆக வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
பரபரப்பான நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. இது, பயணியருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது, தேஜஸ்வியின் கடந்த ஓர் ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே எனலாம். அதே சமயம், அரசியல்வாதி என்றால் தேஜஸ்வியை போல இருக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். மக்களுக்கு பிரச்னை என்றால் களத்தில் இறங்கி போராட வேண்டும்.
அதை விட்டுவிட்டு மைக்கில் பேசிக் கொண்டு மட்டும் இருக்கக்கூடாது என அவரை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

