/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிறிஸ்துவ துணை ஜாதி நீக்கம் அதிகாரப்பூர்வமாக கேட்கும் பா.ஜ.,
/
கிறிஸ்துவ துணை ஜாதி நீக்கம் அதிகாரப்பூர்வமாக கேட்கும் பா.ஜ.,
கிறிஸ்துவ துணை ஜாதி நீக்கம் அதிகாரப்பூர்வமாக கேட்கும் பா.ஜ.,
கிறிஸ்துவ துணை ஜாதி நீக்கம் அதிகாரப்பூர்வமாக கேட்கும் பா.ஜ.,
ADDED : செப் 24, 2025 06:14 AM
பெங்களூரு : 'கிறிஸ்துவ துணை ஜாதி நீக்கம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., கோரிக்கை வைத்துள்ளது.
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நேற்று முன்தினம் துவங்கியது. கணக்கெடுப்புக்கு முன் வெளியிட்ட ஜாதி பட்டியலில் கிறிஸ்துவர் பிரிவில் 38 துணை ஜாதிகள் பெயர் சேர்க்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் 33 துணை ஜாதி பெயர்கள் கைவிடப்படும் என, கணக்கெடுப்பை நடத்தும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் ஆணைய தலைவர் மதுசூதன் நாயக்கை, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் தலைமையிலான குழுவினர் நே ற்று சந்தித்தனர். 'துணை ஜாதிகள் பெயர்கள் கைவிடப்படும் என்று கூறினாலும், அதை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்' என, குழுவினர் கோரிக்கை வைத்தனர்.