/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜி.எஸ்.டி., குறைப்பு எப்.கே.சி.சி.ஐ., வரவேற்பு
/
ஜி.எஸ்.டி., குறைப்பு எப்.கே.சி.சி.ஐ., வரவேற்பு
ADDED : செப் 24, 2025 06:13 AM

பெங்களூரு : 'ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டு இருப்பது, மத்திய அரசின் அருமையான நடவடிக்கை' என, எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில் சங்க கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணா கூறியதாவது:
மத்திய அரசு ஜி.எஸ்.டி.,யில் சீரமைப்பு செய்து 5, 12, 18, 25 சதவீதம் என்று இருந்த நான்கு அடுக்கு வரியை 5, 18 என்ற இரு அடுக்காக குறைத்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. மத்திய அரசு அருமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வரி குறைப்பு நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கு ஏற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வரி குறைப்பால் தொழில் துறையினர், வியாபாரிகளுக்கு அதிக நன்மை பயக்கும். வாகன விற்பனை அதிகரிக்கும். வரிக்கு பயந்து பொருட்களை குறைவாக வாங்கியவர்கள் கூட, வரும் நாட்களில் அதிக பொருட்களை வாங்குவர். சில தினங்களுக்கு முன்பு வரை ஒரு சட்டை வாங்கியவர்கள், இப்போது மூன்று சட்டை வாங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.