sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 'இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிடில் பா.ஜ.,வினர் துாங்க விட மாட்டார்கள்'

/

 'இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிடில் பா.ஜ.,வினர் துாங்க விட மாட்டார்கள்'

 'இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிடில் பா.ஜ.,வினர் துாங்க விட மாட்டார்கள்'

 'இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிடில் பா.ஜ.,வினர் துாங்க விட மாட்டார்கள்'


ADDED : ஏப் 11, 2026 04:17 AM

Google News

ADDED : ஏப் 11, 2026 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: ''இடைத்தேர்தல் நடந்த பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில், ஒன்றிலாவது காங்கிரஸ் வெற்றி பெறாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகள், பா.ஜ.,வினர் எங்களை துாங்க விடமாட்டார்கள்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.

பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஒரு தொகுதியை, மற்றொரு தொகுதியுடன் ஒப்பிட முடியாது. ஷிகாவியில் வெற்றி பெற்றதை போன்று, பாகல்கோட்டில் வெற்றி பெறுவோம் என்றால், அது தவறானது. பாகல்கோட் தொகுதியில் கால் பதித்த பின், அங்கு எங்களுக்கு பல பிரச்னைகள் தென்பட்டன. மேட்டியின் மறைவினால் காலியான தொகுதியை, மீண்டும் கைப்பற்றுவது காங்கிரசுக்கு முக்கியம். இது. வெறும் இடைத்தேர்தல் அல்ல. பதிலாக கட்சியின் பலத்தை நிரூபிக்கும் மேடை.

பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தி, மக்களை சேர்த்தால், தேர்தலில் வெற்றி பெறுவோம் என, நினைப்பது தவறு. பாகல்கோட்டில் தொண்டர்களை அடிமட்டத்தில் இருந்தே ஒருங்கிணைத்து, தேர்தலை எதிர் கொண்டோம். இடைத்தேர்தல் நடந்த இரண்டு தொகுதிகளும் காங்கிரசுக்கு முக்கியம். இரண்டில் ஒரு தொகுதியிலாவது, நாங்கள் வெற்றி பெறாவிட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகள் பா.ஜ.,வினர் எங்களை துாங்க விடமாட்டார்கள்.

தாவணகெரே தெற்கில், சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதே சமுதாயத்தினருக்கு, 'சீட்' கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மூத்த தலைவர் சிவசங்கரப்பா, இத்தனை ஆண்டுகளாக அத்தொகுதி பிரதிநிதியாக இருந்தார். அவர் காலமானதால் அவரது குடும்பத்தினருக்கு சீட் கொடுத்தோம். அமைச்சர் மல்லிகார்ஜுன், சிறுபான்மையினருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் பணியாற்றுவார்.

காங்கிரசுக்கு அஹிந்தா சமுதாயத்தினரே யானை பலம். இவர்களே எங்கள் கட்சியின் அஸ்திவாரம். அந்த சமுதாயத்தை எவ்வளவு பலப்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு கட்சியின் பலம் அதிகமாகும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அதில், எந்த சந்தேகமும் வேண்டாம்.

இவ்வாறு சதீஷ் ஜார்கிஹோளி கூறினார்.






      Dinamalar
      Follow us