sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரில் கனமழை பெய்ததால் திருப்பி விடப்பட்ட கவர்னர் விமானம்

 பெங்களூரில் கனமழை பெய்ததால் திருப்பி விடப்பட்ட கவர்னர் விமானம்

 பெங்களூரில் கனமழை பெய்ததால் திருப்பி விடப்பட்ட கவர்னர் விமானம்


ADDED : ஏப் 11, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:18 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் கவர்னர் பயணித்த விமானம் உட்பட நான்கு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

கோடை வெயிலால் பாதிக்கப்பட்ட பெங்களூரு உட்பட கர்நாடக மக்கள், அவ்வப்போது பெய்யும் மழையால் மகிழ்ந்து வருகின்றனர். பெங்களூரில் நேற்று மாலையில் மல்லேஸ்வரம், காந்திநகர், விதான்சவுதா, சிவாஜிநகர், மெஜஸ்டிக், யஷ்வந்த்பூர், வசந்த்நகர் உட்பட நகரின் பல பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுபோன்று, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய பகுதியிலும் கனமழை பெய்தது. தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சி முடிந்த பின், நேற்று மாலை 4:30 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் வந்தார். அந்நேரத்தில் விமான நிலைய பகுதியில் கனமழை பெய்ததால், அவரின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி விடப்பட்டது. இதையடுத்து மீண்டும் மங்களூருக்கே விமானம் சென்றது.

இதுபோன்று சென்னையில் இருந்து வந்த இரண்டு விமானங்களும், மும்பையில் இருந்து வந்த ஒரு விமானமும் திருப்பி விடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us