sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காசோலை திருடியதாக பெண் ஊழியருக்கு தொல்லை கொடுத்த 3 அதிகாரிகள் மீது வழக்கு

 காசோலை திருடியதாக பெண் ஊழியருக்கு தொல்லை கொடுத்த 3 அதிகாரிகள் மீது வழக்கு

 காசோலை திருடியதாக பெண் ஊழியருக்கு தொல்லை கொடுத்த 3 அதிகாரிகள் மீது வழக்கு


ADDED : ஏப் 11, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அசோக்நகர்: காசோலையை திருடியதாக கூறி, எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

கர்நாடக அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறைக்கு உட்பட்டது, எம்.எஸ்.ஐ.எல்., என்ற, மைசூரு சேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட். இதன் தலைமை அலுவலகம் பெங்களூரு வசந்த்நகர் கன்னிங்காம் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில், சிட் பண்ட் பிரிவில் ஊழியராக பணியாற்றுபவர் வினோதா; எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர்.

இவர், மேற்கு மண்டல மனித உரிமைகள் ஆணைய போலீஸ் நிலையத்தில், கடந்த, 3ம் தேதி அளித்த புகார்:

எம்.எஸ்.ஐ.எல்., நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். கடந்த ஓராண்டாக நிறுவன பொது மேலாளர் சந்திரசேகர், துணை மேலாளர்கள் நளினி, வீணா ஆகியோர் எனக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்கின்றனர். நான் எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ஜாதி ரீதியாக என்னை அவமதிக்கின்றனர். அவர்கள் கூறுவதை கேட்டு பணியாற்றும்படியும், இல்லையெனில், வேலையை விட்டு நிற்கும்படியும் மிரட்டுகின்றனர்.

திருட்டு பழி எனக்கும், நிறுவனத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கும், தகாத உறவு இருப்பதாக அவதுாறு பரப்பினர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற பின், மன்னிப்பு கேட்டனர். அதிலிருந்தே என்னை பழிவாங்க பார்க்கின்றனர். அலுவலகத்தில் இருந்த கையெழுத்திட்ட இரண்டு காசோலைகள் காணாமல் போயின. நான் திருடியதாக பழி சுமத்தினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ம் தேதி, என்னை அலுவலகத்திற்கு வரவழைத்தனர்.

அங்கு வேலை செய்யும் சுமதி என்ற பெண் மூலம், என் ஆடைகளை களைந்து சோதனை செய்ய வைத்தனர். அந்த அறையில் என்னை, ஐந்து மணி நேரம் சிறை வைத்தனர். இதுபற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றனர். எனக்கு அவர்கள் தொடர்ந்து கொடுத்த தொல்லையால் வேறு வழியின்றி புகார் அளிக்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.

அந்த புகாரின்படி சந்திரசேகர், நளினி, வீணா மீது நேற்று வழக்கு பதிவானது.

இதற்கிடையில் கடந்த, 6ம் தேதி விதான் சவுதா போலீஸ் நிலையத்தில், சந்திரசேகர் அளித்த புகாரில், அலுவலகத்திற்கு வந்த காசோலையை பயன்படுத்தி, 2.50 லட்சத்தை தன் வங்கிக்கணக்கிற்கு மாற்றியதாக வினோதா மீது குற்றம் சாட்டி இருந்தார். அந்த பணம் தன் வங்கிக்கணக்கிற்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என, வினோதாவும் கூறி உள்ளார். இரு தரப்பு அளித்த புகார் குறித்தும் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us