தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தந்திர அரசியல் செய்யும் பா.ஜ., முதல்வர் சிவகுமார் பாய்ச்சல்

தந்திர அரசியல் செய்யும் பா.ஜ., முதல்வர் சிவகுமார் பாய்ச்சல்

தந்திர அரசியல் செய்யும் பா.ஜ., முதல்வர் சிவகுமார் பாய்ச்சல்


UPDATED : அக் 07, 2026 02:51 PM

ADDED : அக் 06, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 02:51 PM ADDED : அக் 06, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கர்நாடக பா.ஜ., தந்திர அரசியல் செய்யக்கூடாது. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:

கர்நாடக பா.ஜ., தந்திர அரசியல் செய்யக்கூடாது. ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

வாக்காளர்களின் பெயர்கள் ஒரு ஓட்டுச்சாவடியில் இருந்து மற்றொரு ஓட்டுச்சாவடிக்கு மாற்றப்படுகின்றன. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர், ஏழைகளின் ஓட்டுகள் பறிக்கப்படுகின்றன. இது, உண்மையிலேயே வெட்கக்கேடான விஷயம்.

பா.ஜ., தொண்டர்கள் நிரபராதிகள். ஏனெனில், ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் ஆகிய மூன்று பேரும் சென்று படிவம் 7 விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல் ஆவணங்களுடன் ஊடகத்தில் வெளியாகி உள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், இந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, தங்கள் மொபைல் போன் எண்களையும் கொடுத்துள்ளதால், அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

பெலகாவி, விஜயபுராவின் பாபலேஸ்வர் தொகுதியை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ரவி பாட்டீலும் படிவம் 7ஐ தவறாக பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டு உள்ளார். சிருங்கேரி தொகுதியில் நள்ளிரவில், 1,500 படிவம் 7 விண்ணப்பங்கள் எரிக்கப்பட்டதாக கூறினார்.

பெங்களூரின் ஜெயநகர் மற்றும் பல்லாரி உட்பட மாநிலத்தின் பல தொகுதிகளில் படிவம் 7 விண்ணப்பங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளன.

தற்போது பா.ஜ., வின் அசோக், விஜயேந்திரா ஆகியோர், 25ஆயிரம் படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். 'யானையை திருடினாலும் திருடன் தான், பாக்கை திருடினாலும் திருடன் தான்' என்று ஒரு பழமொழி உண்டு. ஓட்டு திருட்டில் பா.ஜ., ஈடுபடுவது சரியல்ல.

மாநில முதல்வர், எம்.எல்.ஏ., கட்சியின் தலைவர் என்ற முறையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். மாநில மக்களின் ஓட்டுகளை பாதுகாப்பது என் பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us