தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/புல் அவுட்ஸ்

புல் அவுட்ஸ்

புல் அவுட்ஸ்


UPDATED : அக் 07, 2026 12:00 AM

ADDED : அக் 06, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:00 AM ADDED : அக் 06, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொய் வழக்கு


வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கக்கோரி, படிவம் சமர்ப்பித்த பா.ஜ., வினர் மீது பதிவாகும் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். பல்லாரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பா.ஜ., தொண்டர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பா.ஜ.,வினர் யாரும் பொது சொத்தை சேதப்படுத்தவில்லை. இருப்பினும், மாநில அரசின் அழுத்தத்தால், பா.ஜ.,வினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
- சதீஷ்,
பா.ஜ., – எம்.எல்.ஏ.,



சட்ட சிக்கல்கள்


வாக்காளர் படிவம் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்து உள்ளது. இவ்விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன். குமாரசாமி செய்வதெல்லாம் சரி. நாங்கள் செய்வதெல்லாம் தவறா... குமாரசாமிக்கு கொஞ்சம் கூட அறிவில்லை. பெங்களூரில் ஐந்து போலீஸ் கமிஷனர்கள் நியமிப்பது சற்று சிரமமான காரியமே. இதில், சட்டசிக்கல்கள் உள்ளன. இது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
- பிரியங்க் கார்கே,
உள்துறை அமைச்சர்



ராகுல் விரக்தி


எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் கர்நாடகாவில் அமைதியின்மையை உருவாக்க, முதல்வர் சிவகுமார் முயல்கிறார். பிரதமர் மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் உலகரங்கில் அதிகரிக்கிறது. இதனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விரக்தி யடைந்துள்ளார். இதனாலேயே, அரசியலமைப்புக்கு எதிராக போராட்டங்களை காங்கிரசார் நடத்துகின்றனர். இதெல்லாம் ஏற்புடையதல்ல.
- விஜயேந்திரா,
பா.ஜ., மாநில தலைவர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us