தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நாள் முழுதும் புத்தக பூங்காவில் இருப்பேன்: ‘தினமலர்’ வாசகர் ரகோத்தமன் நெகிழ்ச்சி

நாள் முழுதும் புத்தக பூங்காவில் இருப்பேன்: ‘தினமலர்’ வாசகர் ரகோத்தமன் நெகிழ்ச்சி

நாள் முழுதும் புத்தக பூங்காவில் இருப்பேன்: ‘தினமலர்’ வாசகர் ரகோத்தமன் நெகிழ்ச்சி


UPDATED : அக் 07, 2026 12:00 AM

ADDED : அக் 06, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:00 AM ADDED : அக் 06, 2026 09:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘கடல் தாமரை புத்தகப் பூங்கா’ சிறிதாக இருந்தாலும், சிறப்பாக இருப்பதாக தினமலர் வாசகர் ரகோத்தமன் கூறினார்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள, ‘தினமலர்’ அலுவலகத்தில் இயங்கும், ‘கடல் தாமரை புத்தகப் பூங்கா’விற்கு தினமும் ஏராளமான வாசகர்கள் வருகின்றனர். அவ்வகையில், பெங்களூரு சி.வி.ராமன் நகரில் வசிக்கும்,‘தினமலர்’ வாசகரான ரகோத்தமன், 74, நேற்று நுாலகத்துக்கு வந்தார். எண்ணற்ற புத்தகங்களை பார்த்து அசந்தார்.

தனது அனுபவம் குறித்து, அவர் கூறியதாவது:

பெங்களூரில், 11 ஆண்டுகளாக வசிக்கிறேன். தமிழகத்தின் சென்னை மேற்கு மாம்பலம் தான் எனது பூர்வீகம். 15 ஆண்டுகளாக தினமலரை வாசிக்கிறேன். தினமலரின் தீவிர வாசகன் என சொல்வதில் பெருமை அடைவேன்.

இதுவரை, வாரமலர் இதழில் நடத்தப்படும் சிறுகதை போட்டிக்கு, 25க்கும் மேற்பட்ட முறை கதைகள் எழுதி உள்ளேன். இது உங்கள் இடம் பகுதியில் ஏராளமான கடிதங்கள் எழுதி உள்ளேன். பல முறை பரிசும் பெற்று உள்ளேன்.

கடல் தாமரை புத்தகப் பூங்காவுக்கு வர வேண்டும் என, பல நாட்களாக திட்டமிட்டேன். எனது வீட்டிலிருந்து, பஸ் மூலம் 2 மணி நேரம் பயணித்து வந்தேன். வந்து பார்த்ததும் பரிச்சயமான பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருப்பதை பார்த்து மெய் சிலிர்த்தேன். அந்துமணியின் கேள்வி பதில்கள், பா.கே.ப., புத்தகங்களை படித்தேன். பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன.

நுாலகம் சிறிதாக இருந்தாலும், சிறப்பாக இருக்கிறது. இங்குள்ள புத்தகங்களை படித்து முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும். மீண்டும் ஒரு முறை நுாலகத்துக்கு வந்து ஒரு நாள் முழுவதும் செலவிட திட்டமிட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us