தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சென்னப்பட்டணா மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் காதர் ஆய்வு

சென்னப்பட்டணா மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் காதர் ஆய்வு

சென்னப்பட்டணா மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் காதர் ஆய்வு


UPDATED : அக் 07, 2026 12:00 AM

ADDED : அக் 06, 2026 09:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:00 AM ADDED : அக் 06, 2026 09:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம்நகர்: அரசு பொது மருத்துவமனைக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் காதர் நள்ளிரவில் திடீர் வருகை தந்து, ஆய்வு செய்தார். மருந்துகளை வெளியே வாங்கும்படி நோயாளிகளிடம் டாக்டர்கள் கூறுவதை அறிந்து கண்டித்தார்.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் காதர், தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் நோக்கில், ராம்நகரின் சென்னப்பட்டணாவுக்கு நேற்று முன் தினம் வந்திருந்தார். அதன்பின் நள்ளிரவு, சென்னப்பட்டணா பொது மருத்துவமனைக்கு சென்று, ஆய்வு செய்தார்.

பொது வார்டு, ஐ.சி.யு., அறை, கழிப்பறைகளை பார்வையிட்டார். மருத்துவமனை ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். டாக்டர்களிடம் தகவல் கேட்டறிந்தார்.

வார்டுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், பிரச்னைகளை கேட்டறிந்தார். அப்போது டாக்டர்கள் மருந்துகளை எழுதி கொடுத்து, வெளியே வாங்கி வரும்படி கூறுவதாக, நோயாளிகள் கூறினர்.

இதை கேட்ட அமைச்சர், டாக்டர்களை கண்டித்தார். ‘மருத்துவமனையில் இவ்வளவு வசதிகள் இருந்தும், மருந்துகளை வெளியே வாங்கும்படி ஏன் கூறுகிறீர்கள். நோயாளிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல், சிகிச்சை அளியுங்கள்’ என உத்தரவிட்டார்.

காதர் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், மருத்துவமனைகளுக்கு திடீரென வந்து, ஆய்வு செய்துள்ளார். நோயாளிகளின் பிரச்னைகளை நேரில் தெரிந்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us