/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமான நிலையத்தில் முஸ்லிம்கள் தொழுகை முதல்வர், அமைச்சருக்கு பா.ஜ., கிடுக்கி
/
விமான நிலையத்தில் முஸ்லிம்கள் தொழுகை முதல்வர், அமைச்சருக்கு பா.ஜ., கிடுக்கி
விமான நிலையத்தில் முஸ்லிம்கள் தொழுகை முதல்வர், அமைச்சருக்கு பா.ஜ., கிடுக்கி
விமான நிலையத்தில் முஸ்லிம்கள் தொழுகை முதல்வர், அமைச்சருக்கு பா.ஜ., கிடுக்கி
ADDED : நவ 11, 2025 04:29 AM

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால், முதல்வர், அமைச்சர் பிரியங்க் கார்கேயை பா.ஜ., கேள்வி கேட்டு துளைத்துள்ளது.
கர்நாடகாவில் அரசு கட்டடங்கள், பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., உட்பட பதிவு செய்த, செய்யப்படாத அமைப்புகள் தங்களின் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு, நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்து. இதை எதிர்த்து தாக்கல் செய்த அரசின் மேல்முறையீட்டு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆர்.எஸ்.எஸ்.,சை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், முஸ்லிம்கள் தொழுகை நடத்திய வீடியோ, நேற்று முன்தினம் சமூக வலைதளத்தில் பரவியது.
இதை கண்டித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் விஜய் பிரசாத் கூறியதாவது:
அதிக பாதுகாப்பு கொண்ட கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் தொழுகை நடத்த அனுமதித்து யார்? இது பற்றி முதல்வர் சித்தராமையாவுக்கும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கும் தெரியுமா?
ஆர்.எஸ்.எஸ்., சாலை ஊர்வலத்தை நடத்துவதை எதிர்க்கும் மாநில அரசுக்கு, தடை செய்யப்பட்ட பகுதியில் தொழுகை நடத்துவது, தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனைய த்தில், சர்வ மத பிரார்த்தனை அ றை உள்ளது. பாதுகாப்பு சோதனைகளை முடித்த பின், இந்த அறையை ப யன்படுத்தலாம்' என, பலரும் கருத்துத் தெரிவித்து வருகின் றனர்.

