/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பை அவசரமாக நடத்துவதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பை அவசரமாக நடத்துவதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பை அவசரமாக நடத்துவதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பை அவசரமாக நடத்துவதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு
ADDED : செப் 03, 2025 10:01 AM

பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அவசரமாக நடத்துவதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் மதுசூதன் நாயக்கை, பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன், கார்கலா எம்.எல்.ஏ., சுனில்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்தனர். 'ஜாதிவாரி கணக்கெடுப்பை அவசரமாக நடத்த வேண்டாம்' என கூறி மனு அளித்தனர்.
பின், சுனில்குமார் அளித்த பேட்டி:
மாநிலத்தில் 15 நாட்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது. ஆனால் காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தத்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பை 15 நாட்களில் முடிக்கும்படி, மாநில அரசு கூறுவது சரியல்ல. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் மனு அளித்துள்ளோம்.
மாநிலத்தில் 1,400 ஜாதிகள் இருப்பதாக செய்தி தாள்களில் வெளியிட்டு, ஆட்சேபனை இருந்தால் கூறும்படி அரசு சொல்கிறது. புதிதாக ஜாதிகளை உருவாக்கி உள்ளனர்.
குருபர் கிறிஸ்தவர், மடிவாளா கிறிஸ்தவர், ஒக்கலிக கிறிஸ்தவர் என்று ஜாதிகள் பெயர்கள் வெளியிட்டிருப்பது ஏற்க முடியாதது. ஹிந்து ஜாதிகளை கிறிஸ்தவர், முஸ்லிம் என்று முத்திரை குத்தி, மதமாற்றத்தை ஊக்குவிக்க அரசு முயற்சி செய்கிறது.
இதற்கு முன்பு 165 கோடி ரூபாய் செலவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பில் மாநில மக்களுக்கு உள்ள குழப்பத்தை, அரசு முதலில் சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.