sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அம்பேத்கரை கையில் எடுக்கும் பா.ஜ.,

/

அம்பேத்கரை கையில் எடுக்கும் பா.ஜ.,

அம்பேத்கரை கையில் எடுக்கும் பா.ஜ.,

அம்பேத்கரை கையில் எடுக்கும் பா.ஜ.,


ADDED : ஜூலை 16, 2025 08:15 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 08:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ., எதிரி. அரசியல் அமைப்பு சட்டத்தை காங்கிரஸ் தான் பாதுகாக்கிறது' என, பல ஆண்டுகளாக தேசிய, மாநில அளவிலும் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. போதாக்குறைக்கு கட்சியின் அறிவிக்கப்படாத தலைவர் ராகுலும், கையில் எப்போதும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்துடன் வளம் வருகிறார்.

இந்த நாடகத்திற்கு எதிர்வினையாக ஆற்ற நினைத்த பா.ஜ., மூத்த தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்துக்கு பா.ஜ., எதிரி இல்லை என்பதை நிரூபிக்க புதிய ரூட்டை கையில் எடுத்துள்ளனர்.

களத்தில் சிமென்ட்


இதற்காக, கட்சியின் மாநில எஸ்.சி., பிரிவு தலைவரும், சக்கலேஸ்பூர் எம்.எல்.ஏ.,வுமான சிமென்ட் மஞ்சுநாத்தை மாநில பா.ஜ., களமிறக்கியது. இவரது தலைமையிலான குழு, அரசியலமைப்பு சட்டம் குறித்த புதிய ஆவணப்படத்தை தயாரிக்க உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை குறித்து பாமரர்களும், இன்றைய தலைமுறையினரும் எளிதில் புரிந்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட உள்ளது.

ஆவணப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பாடலும் வெளியிடப்பட்ட நிலையில், ஆவண படம் தயாரான பின், மஞ்சுநாத் தலைமையில் பல ஊர்களுக்கும் சென்று தீவிர பிரசாரம் செய்ய பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

அரசியலமைப்பு கொலை


இதுகுறித்து மஞ்சுநாத் கூறுகையில், “அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகள் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைவருக்கும் எடுத்துரைப்பது நம் கடமை. இதனால், ஆவணப்படத்தை தயாரிக்கிறோம். இது நிச்சயம் வெற்றியடையும்,” என்றார்.

மேல்சபை தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், “பா.ஜ., ஒரு போதும் அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்தது இல்லை. ராகுல் கையில் அரசியலமைப்பு புத்தகத்துடன் வளம் வருவதற்கு காரணம், இந்திராவின் ஆட்சியில் அரசியலமைப்பு சட்டம் கொலை செய்யப்பட்டதை மறைக்கவே,” என்றார்.

ஆக... அம்பேத்கர் பற்றி படம் போட்டுக் காட்டி, அவர் இயற்றிய சட்டங்கள் குறித்து விளக்கி, அரசியலமைப்பு சட்டத்துக்கு பா.ஜ., ஒரு போதும் எதிரி இல்லை, அரசியலமைப்பை காங்கிரஸ் எப்படியெல்லாம் கேலிக்கூத்தாக்கியது என்பதை மக்களிடம் கொண்டு செல்ல அக்கட்சி தலைவர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

இந்த ஆவணப்படம், எந்த அளவுக்கு பா.ஜ.,வுக்கு கை கொடுக்கும் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us