தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பா.ஜ., குழு ஆலோசனை

 இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பா.ஜ., குழு ஆலோசனை

 இடைத்தேர்தல் வேட்பாளர்கள் பா.ஜ., குழு ஆலோசனை


ADDED : மார் 14, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் குறித்து, பா.ஜ., உயர்மட்ட குழுவில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

கர்நாடக பா.ஜ.,வின் உயர்மட்ட குழு கூட்டம், பெங்களூரு மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில பா.ஜ., பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் தலைமையில் நடந்த ஆலோசனையில் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பின், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:

மூன்று எம்.எல்.சி., தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளோம். இடைத்தேர்தல் நடக்க உள்ள பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து, மேலிட பொறுப்பாளர் தலைமையில் விவாதித்தோம். இங்கு விவாதிக்கப்பட்டவர்கள் பெயர்களை, ஓரிரு நாட்களில் மேலிடத்திற்கு அனுப்பி வைப்பேன்.

கடந்த காலங்களில் நடந்ததை மறந்து விட்டு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, விவாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைய பிரச்னைகள் பற்றி பேசினோம். நான்கு சுவருக்குள் பேசும் அனைத்தையும் வெளியே சொல்லி விட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us