தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவசாயிகளுடன் பா.ஜ., குழு இன்று சந்திப்பு 

 விவசாயிகளுடன் பா.ஜ., குழு இன்று சந்திப்பு 

 விவசாயிகளுடன் பா.ஜ., குழு இன்று சந்திப்பு 


ADDED : ஜூன் 17, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பிடதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை, எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையிலான, பா.ஜ., குழு இன்று சந்திக்க உள்ளது.

பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதி தாலுகாவில், 9 கிராமங்களில் 7,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, டவுன்ஷிப் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு இரண்டு கோடி ரூபாயை அரசு விவசாயிகளுக்கான இழப்பீடாக நிர்ணயித்துள்ளது. ஆனால் விவசாயிகள் ஆறு கோடி ரூபாய் வரை கேட்கின்றனர். இதற்கு அரசு மறுத்து உள்ளதால், நிலம் தர மாட்டோம் என்று விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த விவகாரத்தை முன் வைத்து போராடும் விவசாயிகளுக்கு, ம.ஜ.த., இளைஞரணி தலைவர் நிகில் குமாரசாமி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். வரும் 21ம் தேதி டவுன்ஷிப் திட்டத்திற்கு எதிராக, ம.ஜ.த., சார்பில் பாத யாத்திரை நடக்கிறது.

இந்நிலையில், பா.ஜ.,வும் இந்த விஷயத்தில் களம் இறங்கியுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் தலைமையிலான பா.ஜ., குழு, பிடதிக்கு இன்று செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us