தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹிரியூர் தொகுதியில் ம.ஜ.த., போட்டி? அமித் ஷா – குமாரசாமி சந்திப்பு!

ஹிரியூர் தொகுதியில் ம.ஜ.த., போட்டி? அமித் ஷா – குமாரசாமி சந்திப்பு!

ஹிரியூர் தொகுதியில் ம.ஜ.த., போட்டி? அமித் ஷா – குமாரசாமி சந்திப்பு!


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: இடைத்தேர்தலில் ஹிரியூர் தொகுதியை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தரும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், குமாரசாமி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான டி.சுதாகர் உடல்நலக்குறைவால் கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதனால், ஹிரியூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக டி.சுதாகரின் மகன் சுகாஸ் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ., பூர்ணிமா சீனிவாஸ் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், ஹிரியூர் தொகுதியில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு இல்லை. ம.ஜ.த.,வுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனால், ஹிரியூர் தொகுதியில் எப்படியாவது போட்டியிட வேண்டுமென, ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி, தீவிரமாக உள்ளார்.

இதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, டில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்தார்.

அப்போது, ஹிரியூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுள்ளார். யோசித்து பதிலளிப்பதாக அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us