தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மனைவியை கொலை செய்து மூட்டை கட்டிய கணவர் கைது

மனைவியை கொலை செய்து மூட்டை கட்டிய கணவர் கைது

மனைவியை கொலை செய்து மூட்டை கட்டிய கணவர் கைது


UPDATED : நவ 21, 2026 12:00 AM

ADDED : நவ 20, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 12:00 AM ADDED : நவ 20, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடிகேஹள்ளி: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை மூட்டை கட்டி வீசிய கணவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு கொடிகேஹள்ளி குண்டாஞ்சநேயா கோவில் பூங்கா பகுதியில் உள்ள குப்பை மேட்டில், கடந்த 6ம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து மனித எலும்புகள், மண்டை ஓடுகள் மீட்கப்பட்டன. தடய ஆய்வக அறிக்கையில், அந்த மனித எலும்புகள் பெண்ணிற்கு உரியது என்பது தெரிந்தது.

கொடிகேஹள்ளி போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது கொடிகேஹள்ளியில் வசித்த சுஜாதா, 34, என்ற பெண், இரண்டு மாதங்களாக வீட்டில் இல்லை என்பது பற்றி, அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்கள், போலீசிடம் கூறினர்.

சுஜாதாவின் மொபைல் போன் எண்களை வைத்து விசாரித்த போது, செப்டம்பர் மாதம் அவரது மொபைல் போன் நம்பர் கடைசியாக குண்டாஞ்சநேயா கோவில் பூங்கா பகுதியில் இருந்ததை காட்டியது. அதே பகுதியில் சுஜாதாவின் 2வது கணவர் பயாஸ் பாஷா, 24, என்பவரின் மொபைல் போன் சிக்னலும் இருந்தது. பின், அவர் மொபைல் சுவிட்ச் ஆப் ஆனது தெரிந்தது.

அவரை போலீசார் தேடிய நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பேட்ராயனபுராவில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் மனைவி மீது சந்தேகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி, குப்பை மேட்டில் வீசியதை அவர் ஒப்பு கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us