/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடிப்படை கணிதம் தெரியாத பா.ஜ., போக்குவரத்து அமைச்சர் விளாசல்
/
அடிப்படை கணிதம் தெரியாத பா.ஜ., போக்குவரத்து அமைச்சர் விளாசல்
அடிப்படை கணிதம் தெரியாத பா.ஜ., போக்குவரத்து அமைச்சர் விளாசல்
அடிப்படை கணிதம் தெரியாத பா.ஜ., போக்குவரத்து அமைச்சர் விளாசல்
ADDED : பிப் 06, 2025 11:04 PM

பெங்களூரு: ''வருமானத்துக்கும், லாபத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத, அடிப்படை கணிதம் கூட புரிந்து கொள்ளாத கூட்டம் பா.ஜ.,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.
கர்நாடக பா.ஜ., தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், 'பொய் என்றால் ராமலிங்க ரெட்டி - ராமலிங்க ரெட்டி என்றால் பொய்'. தினமும் பத்திரிகைகளில் ஒரு பக்கம் அளவுக்கு போக்குவரத்து துறை லாபத்தில் இயங்குவதாக அறிவிக்கிறார்.
அப்படி இருக்கும் போது, பஸ்களுக்கு எரிவாயு நிரப்ப, கடன் வாங்கும் ரகசியம் என்ன என்பதை சொல்ல முடியுமா' என்று விமர்சித்திருந்தது.
இதற்கு பதிலடி கொடுத்து, எக்ஸ் சமூக வலைதளத்தில் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடகா பா.ஜ., என்றால் 'எலும்புக்கூடு மக்கள் கட்சி'. அவர்களின் மண்டைக்குள் மூளை இருக்கிறதா, இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாது. பொய்யர்கள் கட்சியில் பொய்யர்கள் ஒன்று கூடி, பொய்களை உண்மை என்று சித்தரிப்பதில் சிறந்த கட்சி.
கடந்த கால ஆட்சியில் இருந்த கட்சியின் தவறான நிர்வாகத்தால், போக்குவரத்து துறையில் ஏற்பட்ட 5,900 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த வேண்டி உள்ளது.
அதற்காகவே, கடன் வாங்கப்படுகிறது. நாங்கள் திரும்பத் திரும்ப, போக்குவரத்து துறையின் வருவாய் அதிகரிக்கிறது என்றே கூறுகிறோம். லாபம் கிடைக்கிறது என்று கூறவில்லை.
வருமானத்துக்கும், லாபத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத, அடிப்படை கணிதத்தை புரிந்து கொள்ளாத அறியாமையால் பா.ஜ., நிறைந்துள்ளது.
எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ், மாநில அரசு, 2 லட்சத்து 30,000 கோடி ரூபாய் புதிய கடன் வாங்கியது. அதில் கவனம் செலுத்தி, தகவல்கள் சேகரியுங்கள், அதை பற்றி பேசலாம்.
இந்தியாவில் 1947 முதல் 2014 வரை 67 ஆண்டு வரலாற்றில், அனைத்து பிரதமர்களும் வாங்கிய மொத்த கடன், 53 லட்சம் கோடி ரூபாய். 2014 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், தற்போதைய மத்திய அரசின் கடன், 149 லட்சம் கோடி ரூபாயாகும்.
இதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக கடன் வாங்கியதற்கான பெருமையை பா.ஜ., பெற்றுள்ளது.
தவறான புள்ளி விபரங்களை வழங்குவதன் மூலமும், மக்களின் பொருளாதார கஷ்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல், நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

