தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இடைத்தேர்தலில் வெற்றி பா.ஜ., விஜயேந்திரா கணிப்பு

 இடைத்தேர்தலில் வெற்றி பா.ஜ., விஜயேந்திரா கணிப்பு

 இடைத்தேர்தலில் வெற்றி பா.ஜ., விஜயேந்திரா கணிப்பு


ADDED : மார் 30, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: ''இ டைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலம் இரண்டையும் தோற்கடித்து பா.ஜ., அ மோக வெற்றி பெறும்,'' என அக்கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

முதல்வர் சித்தராமையா 17 பட்ஜெட்டுகள் தாக்கல் செய்து உள்ளார். இந்த பட்ஜெட்டுகள் எதுவும் பலனளிக்கவில்லை. முதல்வர், டில்லி தலைவர்களின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். இதை அவர் பேசும் வார்த்தைகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

தாவ ணகெரே இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் சீனிவாஸ் கரியப்பாவை வெற்றி பெற செய்ய வேண்டும். இதற்கு அனைவரும் கடுமை யாக உழைக்க வேண்டும். எடியூரப்பா முதல்வராக இருந்த போது முஸ்லிம்களுக்கு ஏராளமான மானியங்களை வழங்கினார். தாவணகெரே தெற்கு தொகுதிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், இத்திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் முடங்கிவிட்டன. செய்வதற்கு நிறைய பணிகள் உள்ளன. எனவே, யாருக்கும்பதிலளித்து நேரத்தை வீண்டிக்க வேண்டாம்.

இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ., அமோக வெற்றி பெறும். ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலம் இரண்டையும் தோற்கடித்து வெற்றியை கைப்பற்றுவோம்.காங்கிரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us