/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராபர்ட் வதேராவை சுட்டு கொல்லணும் பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா சர்ச்சை
/
ராபர்ட் வதேராவை சுட்டு கொல்லணும் பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா சர்ச்சை
ராபர்ட் வதேராவை சுட்டு கொல்லணும் பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா சர்ச்சை
ராபர்ட் வதேராவை சுட்டு கொல்லணும் பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா சர்ச்சை
ADDED : ஏப் 27, 2025 04:48 AM

ஷிவமொக்கா : “காஷ்மீரில் அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த, ராபர்ட் வதேராவை சுட்டுக் கொல்ல வேண்டும்,” என, ஷிவமொக்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா சர்ச்சை கருத்து கூறி உள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில், அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, 'தாங்கள் பலவீனம் அடைந்து வருவதாக முஸ்லிம் நினைப்பதால், பஹல்காம் சம்பவம் நடந்துள்ளது. இது பிரதமர் மோடிக்கு சொல்லும் செய்தி' என சர்ச்சையாக கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதுபற்றி ஷிவமொக்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா நேற்று அளித்த பேட்டி:
பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதன் மூலம், ராபர்ட் வதேரா தேச துரோகம் செய்துள்ளார். அவரை சுட்டுக் கொல்ல வேண்டும்.
மகாத்மா காந்தி, இந்திரா, ராஜிவ் படுகொலை செய்யப்பட்டனர். காந்தி படுகொலைக்கு பின் காங்கிரஸ்காரர்கள் கோட்சேவை பற்றிப் பேசுகின்றனர். இந்திராவை காலிஸ்தானிகள் சுட்டுக்கொன்றனர். அவர்களை காங்கிரசார் துரோகி என்று அழைக்கின்றனரா?
ராபர்ட் வதேரா சாதாரண மனிதன். அவரது மனைவி பிரியங்கா எம்.பி.,யாக உள்ளார். மனைவி எம்.பி., என்பதால் கணவர் எதை வேண்டும் என்றாலும் பேசலாமா?
அப்பாவி மக்களை கொல்லும் பயங்கரவாதிகள், நரகத்திற்கு செல்வர். இந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி வாழ்கின்றனர், பாகிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முடிவு பாராட்ட வேண்டியது. நம் நாட்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். பாகிஸ்தானை, பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார்.
முதல்வர் சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால், பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசுடன் துணை நிற்க வேண்டும். துரோகிகளை ஆதரிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.